ஆசிய கோப்பை: இன்று இந்தியா-இலங்கை மோதல்

ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளும் “ஹாட்ரிக்’ வெற்றியை எதிர்பார்த்து களமிறங்குவதால், ஆட்டத்தில் அனல் பறக்கும். தவிர, இப்போட்டி பைனலுக்கான சிறந்த பயிற்சியாகவும் அமையும்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறது. இதில் பாகிஸ்தான், வங்கதேசம் வெளியேறின. வரும் 24ம் தேதி நடக்கும் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. அதற்கு முன்னதாக இன்று தம்புலாவில் நடக்கும் முக்கியத்துவமில்லாத லீக் போட்டியில் இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. இரு அணிகளும் ஏற்கனவே வங்கதேசம், பாகிஸ்தானை வீழ்த்தியிருப்பதால், தொடர்ந்து மூன்றாவது வெற்றி பெற காத்திருக்கின்றன.

பேட்டிங் பலம்:
இந்திய அணியின் பேட்டிங், வழக்கம் போல் வலுவாக உள்ளது. வங்கதேசம், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முறையே 82, 83 ரன்கள் விளாசிய காம்பிர் அருமையான “பார்மில்’ உள்ளார். பாகிஸ்தானுடனான போட்டியில் அரைசதம் கடந்த கேப்டன் தோனி மற்றும் ரெய்னா அதிரடியாக ரன் சேர்ப்பது அணிக்கு பலம் சேர்க்கிறது. விராத் கோஹ்லி, Levitra online ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா ஆகியோரது ஆட்டம் தான் ஏமாற்றம் அளிக்கிறது. இவர்கள் இன்று சிறப்பாக செயல்படும் பட்சத்தில், இலங்கையை எளிதில் வீழ்த்தலாம்.

பந்துவீச்சை பொறுத்தவரை அனுபவ ஜாகிர், ஹர்பஜன், பிரவீண் குமார் இருப்பதால் கவலை இல்லை. ஆஷிஷ் நெஹ்ரா காயத்தில் இருந்து குணமடைந்து விட்டார். ஆனாலும், வாய்ப்பு பெறுவது சந்தேகமே. இவருக்கு பதில் இன்று அசோக் டிண்டா, பிரக்யான் ஓஜா அல்லது ரவிச்சந்திரன் அஷ்வின் இடம் பெறலாம்.

பவுலிங் பலம்:
சொந்த மண்ணில் இலங்கை அணி அசத்தி வருகிறது. வங்கதேசத்துக்கு எதிராக 126 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. பாகிஸ்தானையும் வென்று காட்டியது. கேப்டன் சங்ககரா, தில்ஷன், ஜெயவர்தனா, ஏஞ்சலோ மாத்யூஸ் ஆகியோர் பேட்டிங்கில் கலக்குகின்றனர். தரங்கா, கபுகேதரா அவ்வப்போது கைகொடுக்கின்றனர். மலிங்கா, குலசேகரா, வெலகேதரா, முரளிதரன் அடங்கிய பலமான பந்துவீச்சு கூட்டணி, இந்திய அணிக்கு கடும் சவால் கொடுக்கலாம்.

சேவக்கிற்கு பதில் கார்த்திக்

இந்திய அணியின் துவக்க வீரர் சேவக், தொடை பகுதியில் ஏற்பட்ட பிடிப்பால் அவதிப்படுகிறார். இதையடுத்து இவர் நாடு திரும்புகிறார். இவருக்கு மாற்றாக தமிழக வீரரும் விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் இடம் பெறுகிறார். இவர், நேற்று இலங்கை சென்றார். இன்று நடக்கும் போட்டியில் கார்த்திக் விளையாட வாய்ப்பு உள்ளது.
நான் “ஆல்-ரவுண்டர்’ அல்ல

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில், ஹர்பஜன் சிங் ஒரு சூப்பர் சிக்சர் அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடி தந்தார். இது குறித்து அவர் கூறுகையில்,””ஆமெர் பந்தில் சிக்சர் அடித்தது மகிழ்ச்சி தான். இதற்காக என்னை “ஆல்-ரவுண்டர்’ என கூறுவது தவறு. அடிப்படையில் பவுலரான எனக்கு கொஞ்சம் பேட்டிங் தெரியும். அவ்வளவு தான். இந்தியா சார்பில் உருவான ஒரே “ஆல்-ரவுண்டர்’ கபில் தேவ் மட்டுமே,”என்றார்.

Add Comment