தடை மீறி கார் ஓட்டிய சவுதி இளம்பெண்ணுக்கு சவுக்கு அடி நிறுத்தி வைப்பு!

தடை மீறி கார் ஓட்டிய சவுதி இளம்பெண்ணுக்கு சவுக்கு அடி நிறுத்தி வைப்பு!

ரியாத்: சவுதி அரேபியாவில் கார் ஓட்டிய பெண்ணுக்கு விதிக்கப்பட்ட 10 சவுக்கு அடி தண்டனையை மன்னர் அப்துல்லா நிறுத்தி வைத்துள்ளார். சவுதியில் இஸ்லாமிய சட்ட திட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. பெண்கள் கார் ஓட்ட கூடாது. ஆண் துணை இல்லாமல் வெளியில் எங்கும் பயணம் செய்ய கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து இன்டர்நெட்டில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பெண்கள் ஓட்டளிக்கலாம், தேர்தலில் பங்கேற்கலாம் என்ற சமீபத்தில் மன்னர் அப்துல்லா அறிவித்தார். ஆனால், கார் ஓட்ட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவில்லை. இந்நிலையில், ஷியாமா ஜஸ்டினியா என்ற பெண் விதிமுறை மீறி கார் ஓட்டினார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் 10 சவுக்கு அடி கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Lasix online justify;”>சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள எனக்கு தண்டனை வழங்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இதை எதிர்த்து அப்பீல் செய்வேன் என்று ஷியாமா கூறியிருந்தார். இந்நிலையில் சவுக்கு அடி தண்டனையை நிறுத்தி வைக்கும்படி மன்னர் அப்துல்லா நேற்று உத்தரவிட்டார்.

Add Comment