கிராமங்களுக்கு விதவிதமான பிராட்பேண்ட் திட்டங்கள்: பிஎஸ்என்எல் வழங்குகிறது!

எத்தனை தனியார் நிறுவனங்கள் வந்தாலும் இந்திய தொலைத் தொடர்புத் துறையில் பிராட்பேண்ட் மார்க்கெட் லீடராகத் திகழ்வது பிஎஸ்என்எல்தான்.

வாடிக்கையர் சேவையில் அத்தனை திருப்தியில்லை என கூறப்பட்டாலும், மறைமுகமான சுரண்டல் எதுவும் இருக்காது என மக்கள்  நம்பிக்கை இன்னும் தொடர்வது ஒரு முக்கிய காரணம். அட அப்படியே போனாலும், நமது அரசாங்கத்துக்குத்தானே போகிறது என்ற சின்ன திருப்தியாவது மிஞ்சுவது இன்னொரு காரணம்.

இப்போது கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு வேறு யாரையும் விட அதிக சலுகைகளுடன் பிராட்பேண்ட் திட்டங்களை அறிவித்துள்ளது. யுஎஸ்எஃப்ஓ (Universal Service Obligation Fund) நிதியுதவியுடன் இந்தத் திட்டங்களை வழங்குகிறது பிஎஸ்என்எல்.

இதன்படி ரூ.99க்கே பிராட்பேண்ட் சேவைகளை கிராமப் புறங்களில் தருகிறது. இதற்கு USOF 99 என்று பெயர், 400 MB வரை தகவல் மாற்றம் செய்யலாம். இதற்கடுத்த திட்டம் BBG Rural USOF 150. இதற்கு ரூ.150 செலுத்த வேண்டும். 1 GB வரை தகவல் மாற்றம் செய்யலாம்.

இந்த இரு திட்டங்களிலும் பிராட்பேண்ட் கட்டணம் தனி, தொலைபேசிக் கட்டணம் தனியாகச் செலுத்த வேண்டும்.

இவ்விரண்டும் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டங்களையும் buy Cialis online தருகிறது பிஎஸ்என்எல்.

BBG Rural Combo 250 திட்டத்தில் 2 Mbps வேகம் கொண்ட இணைப்பு கிடைக்கும். 1 GB வரை தகவல் மாற்றம் செய்யலாம். மாதத்துக்கு 100 தொலைபேசி அழைப்புகள் இலவசம். கட்டணம் ரூ.250.

அடுத்தது The BBG Rural Combo 550. இதிலும் 2 Mbps வேகம் கொண்ட இணைப்பு தருகிறார்கள். 250 அழைப்புகள் இலவசம். 6 GB வரை டேட்டா மாற்றலாம். கோம்போ 999 என்ற திட்டத்தில் 12 ஜிபி வரை டேட்டா மாற்றலாம். 450 இலவச அழைப்புகள் உண்டு. வேகம் அதே 2 Mbps.

BB Home Rural Combo UL 550 என்ற வரையறையற்ற திட்டமும் உண்டு. இதில் 512 Kbps வேகம், 4 GB டேட்டா மாற்றம், 15 இலவச அழைப்புகள் போன்ற வசதிகள் உண்டு. கட்டணம் ரூ.550.

Add Comment