இந்திய ஜனநாயகம் இன்றைக்கு எங்கே போகிறது?

இந்திய ஜனநாயகம் இன்றைக்கு எங்கே போகிறது?

தேசப் பிதா மகாத்மாகாந்தியின் 143-வது பிறந்த நாள் இன்று!

அவரை நினைத்துப் பார்த்து மத்திய – மாநில அரசுகள் நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் தந்திருக்கின்றன.

தமிழக அரசின் விளம்பரங்களில் மகாத்மாவின் உன்னத இலட்சியங்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

� உலக அமைதிக்குப் பாடுபட வேண்டும்

இந்திய ஒருமைப்பாட்டுக்கு உழைக்க வேண்டும்!

சமூக ஒற்றுமைக்குப் பணிபுரிய வேண்டும்!

தீண்டாமை ஒழிப்புக்கு முன்வர வேண்டும்!

இந்த இலட்சியங்கள் ஏட்டளவில் பேசப்படுகின்றனவே தவிர, நாட்டளவில் சொல்லில், செயலில், நடைமுறையில் வெளிப்படுகின்றனவா எனில், இல்லை என்றே சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் இன்றைக்கும் இரண்டாயிரம் கிராமங்களில் இரட்டைக்குவளை கலாச்சாரம் நிலவிக் கொண்டிருக்கிறது. தேனீர் கடையில் தேனீர் அருந்துவதற்குக் கூட இன்னும் பல இடங்களில் சுதந்திரமற்ற நிலையே நீடிக்கிறது.

பல ஊர்களில் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் தெருக்களுக்குத் தடுப்புச் சுவர்கள் வைத்து நடமாட்டம் இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு காலத்தில் தோள் துண்டைச் சுருட்டி இடுப்பில் கட்டிக் கொண்டு, காலில் உள்ள செருப்பைக் கையில் எடுத்துக் கொண்டு, மேல்சாதியினர் Buy cheap Amoxil வீதியில் செல்லும் கீழ்சாதியினர் பாவி வருகிறேன்! என்று கூவிக் கொண்டு போக வேண்டும் என்று நிலை இருந்ததே, அந்த நிலையில் இப்பொழுது எத்துணை அளவு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது? இதுபற்றிய மாநில அளவில் புதிய ஆய்வு செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம்.

மகாத்மாகாந்தி அவர்களைக் கொடுமதியினர் சுட்டுக் கொன்ற நேரத்தில் தமிழகப் பெரியார், இந்தியாவுக்கு காந்தி தேசம் என்று பெயரிடக் கோரினார். அந்த கோரிக்கையின் நியாயத்தை இன்றைக்கு நல்லுள்ளம் கொண்டவர்கள் உணரத் தலைப்பட்டிருக்கிறார்கள். அது நடந்திருக்குமானால், இந்து, இந்தி, இந்து ராஷ்ட்ரம், இவற்றுக்குள் இல்லாதவர்கள் இந்த நாட்டில் இருப்பதற்கே உரிமையற்றவர்கள்- வாக்குரிமை அளிக்கப்படக்கூடாதவர்கள் என்று வக்கிரம் பேசும் வரலாறு தொடர்ந்திருக்காது!

காந்தீயத்தின் அடையாளமாக உண்ணாவிரதம் இருக்கிறது. மகாத்மா உண்ணாவிரதம் இருந்தால், அதனால் சரித்திர சாதனை உருவாயிற்று. இன்றைக்கு அந்த உண்ணா விரதம் என்னும் வார்த்தை கொச்சைப்படுத்தப்படுகிறது. பல்லாயிரம் பேர் பலியாகக் காரணமாயிருந்த நரேந்திரமோடி போன்றவர்களும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அதற்கு ஒரு கோஷ்டி ஆதரவுக் கொடி தூக்குகிறது.

இந்திய ஜனநாயகம் இன்றைக்கு எங்கே போகிறது? என்னும் வினாக்குறி பலரிடம் எழுந்து கொண்டிருக்கிறது. நாட்டில் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வந்த பாரம்பரியப் பண்பாடுகள் விழுந்து கொண்டிருக்கின்றன!

இன்றைக்கு மீண்டும் காந்தீயம் புத்தெழுச்சி பெற்று எழுந்திடுதல் மிக மிக அவசியம் என்ற உணர்வு நல்லவர்களின் உள்ளங்களில் எழுந்து நிற்கிறது.

எண்ணுவதைச் சொல்வதும், சொல்வதைச் செய்வதும், செய்வதைச் சொல்வதும் எண்ணுவதும் ஒரு மனிதனின் நேர்மைக் குணமாகும். அந்த நேர்மைக் குணத்தின் முன்னுதாரணமாக மகாத்மா காந்தியடிகள் திகழ்ந்தார்.

அந்த நேரில் குணமிக்க மக்கள் நாட்டில் பெருகிட வழி எது? அதன் மூலம் புதிய வரலாறு படைக்கும் வாய்ப்பு எங்கே? இதுபற்றிய சிந்தனையே இன்றைய அவசிய அவசரத் தேவையாகும்!

–பேராசிரியர் கே.எம்.கே.

Add Comment