மின் பற்றாக்குறையை போக்க வெளிசந்தையில் இருந்து மின்சாரம் வாங்கப்படும்

சென்னை : “மின்சார பற்றாக்குறையை போக்க வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்கப்படும்’’ என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை:  ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானா போராட்டம் காரணமாக, சிங்கரேனி நிலக்கரி சுரங்கத்தில் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக, ராமகுண்டம் அனல் மின் நிலையத்தில் 1100 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி குறைந்து விட்டது.

ராமகுண்டத்தில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டியதில் பாதி அளவு மின்சாரம்தான் தற்போது கிடைக்கிறது. அதேபோல், ஒரிசா வெள்ளப் பெருக்கு காரணமாக, தால்ச்சர் அனல் மின் நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய மின்சார அளவும் குறைந்துள்ளது.

மேலும், நெய்வேலி அனல் மின் நிலையம், கல்பாக்கம் அணு மின் நிலையம், கர்நாடகா மாநிலத்தில் உள்ள கைகா அணு மின் நிலையம், ஆந்திரா மாநிலத்தில் உள்ள சிம்மாத்ரி அனல் மின் நிலையம் ஆகியவற்றில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய மின்சாரத்தின் அளவிலும் குறைவு ஏற்பட்டுள்ளது.

இவற்றின் காரணமாக, கடந்த நான்கு நாட்களில் மின்சாரத்தின் அளவில் 1,026 மெகாவாட் குறைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பல இடங்களில் எதிர்பாராத மின்தடை ஏற்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் காற்றாலை Buy cheap Ampicillin மூலம் பெறப்படும் மின்சாரத்தின் மொத்த நிறுவு திறன் 6,007 மெகாவாட் ஆக இருந்தாலும், காற்றாலை மூலம் எப்போதும் ஒரே அளவில் மின்சாரம் கிடைப்பதில்லை. தற்போது, காற்றின் அளவு  குறைந்துள்ளதால் காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரம் வெகுவாக குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் மின்தடையை நீக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எனது அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில், எதிர்பாராதவிதமாக கடந்த நான்கு நாட்களாக ஏற்பட்டுள்ள 1,026 மெகாவாட் மின்சார குறைபாட்டை ஈடுசெய்தால் தான், தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையிலேயே மின்சாரத்தை தமிழக மக்களுக்கு வழங்க இயலும்.

கடந்த நான்கு நாட்களாக ஏற்பட்டு வரும் எதிர்பாராத மின் தடையையும், அதன் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை தவிர்த்திடவும் இயலும்.
எனவே, வெளிச்சந்தையில் மின்சாரத்தை வாங்கி, தற்போது ஏற்பட்டுள்ள மின்சார குறை பாட்டை உடனடியாக ஈடு செய்ய வேண்டும் என்று நான் உத்தரவிட்டுள்ளேன்.
அந்த அடிப்படையில், தமிழ்நாடு மின்சார வாரியம் வெளிச்சந்தையில் இருந்து மின்சாரத்தை வாங்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள் ளும்.  இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

Add Comment