மாடு மீது மோதல்: என்ஜின் பழுது-நடுவழியில் நின்ற ரயில்

திருச்சி அருகே எருமை மாடு மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் என்ஜின் பழுதானது. இதனால் ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பல மணி நேரம் தவித்தனர்.

நாகூரில் இருந்து திருச்சி வழியாக எர்ணாகுளம் செல்லும் டீ கார்டன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை திருச்சி நோக்கி Buy Lasix வந்து கொண்டிருந்தது.

திருவெறும்பூர் அருகே குமரசேபுரம்-தொண்டைமான்பட்டி இடையே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த எருமை மாடு மீது ரயில் மோதியது.

இதில் மாடு துண்டு துண்டானது. ஆனால், என்ஜினும் பழுதாகிவிட்டது. இதனால் ரயில் நடுவழியில் நின்றது.

திருச்சியில் ரயில் நிலையத்தில் இருந்து பொறியாளர்கள் வந்து என்ஜின் கோளாறை சரி செய்த பின்னரே ரயில் கிளம்பியது.

Add Comment