பொதுமக்கள் அவதி : ஆளும் கட்சியினர் “ஷாக்’

தென்காசி : தென்காசி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் ஆளும் கட்சி வேட்பாளர்கள் “ஷாக்’ ஆகியுள்ளனர்.
தென்காசி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தினமும் இரண்டு மணி நேரம் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்பட்ட மின்தடை நேரம் போக மற்ற நேரங்களிலும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. எப்போது மின்சாரம் வரும்… எப்போது மின்சாரம் போகும்…என தெரியாமல் தொழில் நிறுவனங்கள் Viagra online பரிதவிக்கின்றன. இரவு நேரமும் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. இரவு நேரம் மாணவ, மாணவிகளின் படிப்பு மின் தடையால் பாதிக்கப்படுகிறது.
ஏற்கனவே தென்காசி பகுதியில் அடிக்கடி திருடு சம்பவங்கள் நடக்கிறது. இப்போது இரவு நேரம் மின்தடையும் இருப்பதால் திருடு சம்பவங்கள் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்படுகிறது. மின்வெட்டால் தினகூலி தொழிலாளர்கள் சம்பள வெட்டுக்கு உள்ளாகி அவதிப்படுகின்றனர்.
தற்போது உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் கட்சி தவிர மற்ற கட்சி வேட்பாளர்கள் மின்வெட்டை முன் வைத்து தேர்தல் பிரசாரம் செய்கின்றனர். இதனால் ஆளும் கட்சி வேட்பாளர்கள் மின் வெட்டால் “ஷாக்’ ஆகி தங்களின் வெற்றி பாதிக்கப்படுமோ என்ற அச்ச உணர்வுடன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Add Comment