32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்

“32 ரூபாயில் நாய் மட்டுமே வாழ முடியும்’

“நகர்ப்புறங்களில், தினமும் 32 ரூபாய்க்கு மேல் செலவிடுவோர், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வராதவர்களாகக் கணக்கிடப்படுவர் என, திட்ட கமிஷன் அளவுகோல் நிர்ணயித்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த 32 ரூபாயை வைத்து, நாய் போன்ற விலங்குகள் மட்டுமே வாழ முடியும்’ என, தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் சக்சேனா கூறியுள்ளார்.
காங்., தலைவர் சோனியா தலைமையிலான, தேசிய ஆலோசனைக் குழு (என்.எஸ்.ஏ.,) உறுப்பினர்களில் ஒருவரான என்.சி.சக்சேனா கூறியதாவது:வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் யார் என்பது குறித்து, திட்ட கமிஷன் ஒரு அளவுகோல் நிர்ணயித்து, அது தொடர்பான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் Buy cheap Doxycycline செய்துள்ளது.இதன்படி, நகர்ப்புறங்களில் தினமும் 32 ரூபாய்க்கு மேல் செலவிடுவோரும், கிராமப்புறங்களில், தினமும் 26 ரூபாய்க்கு மேல் செலவிடுவோரும், வறுமைக் கோட்டு வரம்பிற்குள் வரமாட்டார்கள் என, திட்ட கமிஷன் கூறியுள்ளது. இந்த அளவுகோல், ஆச்சர்யம் அளிக்கிறது. நாய் போன்ற விலங்குகள் மட்டுமே, இந்த 32 ரூபாயை வைத்து வாழ முடியும்.
இது திட்ட கமிஷனுக்கு தெரியாதா? தினமும் 32 ரூபாய்க்கு குறைவாகச் செலவிடுவோரை, ஏழையிலும் ஏழையாகக் கருத வேண்டும். வறியவர்கள் என, அவர்களை அழைக்கலாம். தற்போது நிர்ணயித்துள்ள அளவுகோலை, திட்ட கமிஷன் மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு, சக்சேனா கூறியுள்ளார்.

அதிருப்தி:
திட்ட கமிஷன் நிர்ணயித்துள்ள, வறுமைக் கோட்டுக்கான வரையறைக்கு, காங்., பொதுச் செயலர் ராகுல், தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் அருணா ராய், ஹார்ஸ் மந்திர் ஆகியோர், ஏற்கனவே அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், பல தரப்பினரும், திட்ட கமிஷனின் இந்த நடவடிக்கையை, கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ஏழைகள் யார் ?
திட்ட கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்து, இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். இதனால், 32 ரூபாய் என்ற திட்ட கமிஷனின் வரையறை, உயர்த்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக, திட்ட கமிஷன் சார்பாக, இன்று அறிக்கை வெளியிடப்
படுகிறது.

தகவல் : நல்லூரான்

Add Comment