அதிமுக காணாமல் போகும் ;நாஞ்சில் சம்பத் பேச்சு

அதிமுக காணாமல் போகும் ;நாஞ்சில் சம்பத் பேச்சு

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக காணாமல் போகும் என்று மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.

நெல்லை மதிமுக மேயர் வேட்பாளர் மற்றும் கவுன்சில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் பாளை தெற்குபஜாரில் நடந்தது. கூட்டத்தில் மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார்.
அவர், ‘’ஊழலற்ற உள்ளாட்சி நிர்வாகம் என்ற கொள்கையோடு மதிமுக உள்ளாட்சி தேர்தலை சந்திக்கிறது.

மாநகராட்சியில் நல்ல நிர்வாகம் அமைய ஓய்வுபெற்ற அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்படும். இன்று ஊழல் என்ற பூதம் இந்தியாவை ஆட்டி படைக்கிறது.

தமிழ்நாட்டில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. டிவி பார்க்க முடியவில்லை. Buy cheap Cialis 10 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. கூடங்குளம் அணுமின்நிலையம் தேவை என்பதை நியாயப்படுத்துவதற்காக, தமிழக அரசு மின்வெட்டை அதிகரிப்பது போல் தெரிகிறது.

தமிழ்நாட்டில் எந்தப் பொருளின் விலையும் குறையவில்லை. மணல் கொள்ளை நிற்கவில்லை. மணல் கொள்ளையை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்த நல்லகண்ணுவை வீட்டை காலி செய்ய சொல்லிவிட்டனர். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக காணாமல் போகும்’’என்று பேசினார்.

தகவல் : நல்லூரான்

Add Comment