பஸ்டாண்ட் அருகில் உள்ள டீக்கடை…

சில நடைப்பயணங்கள் சரித்திரத்தில்
இடம்பெறும்…
சில நடைப்பயணங்கள் சரித்திரத்தையே மாற்றும்….அதுபோலவே
எங்களின் இந்த நடைப்பயணமும்

மாலை நேரம் மஃக்ரிப் தொழுகை
முடிந்தவுடன் நம்மவர்களை எங்கு பார்க்கலாம்…
மேற்கே நோக்கி மெது நடை போட்டு
பஸ்டாண்ட் அருகில் உள்ள டீக்கடைகளில் தான்…
இந்த நடையில் எத்தனை விவாதங்கள்…எதிரில் வருவோரிடம் கேலியும் கிண்டலுமாய் ஆரம்பிக்கும் அந்த நடைப்பயணம்…

அன்னக்கிளி டீ ஸ்டால், நேஷனல், நம்ம கல்வெட்டி கடை,வசந்தம் டீ ஸ்டால் என பஸ்டாண்டை சுற்றி அரணாக அமைந்திருக்கும் டீ கடைகள்..
சுட சுட அடுப்பில் வெந்துகொண்டிருக்கும் உளுந்த வடையும்,பஜ்ஜியும்,ஆவிபறக்கும் வெங்காய வடையும்,கட்டி சட்டினி தொட்டு எத்தனை Buy Ampicillin Online No Prescription சாப்பிட்டாலும் மனம் போதும் என்று மட்டும் சொல்வதேயில்லை…
எனக்கு ஒரு அடி சாயா, எனக்கு கொஞ்சம் சீனி தூக்கலாக ஒரு டீ என
கடைக்காரரிடம் ஆர்டர் பண்ணி அரட்டையோடு குடித்து முடிப்பதும்..
குடித்து முடித்ததும் தம் அடிக்க ஒரு கூட்டம் ஒளிந்துபோவதும் என…
இந்த அரைமணிநேர நடைபயணம் கூட மிக சுவராசியமான விஷயம்தான்

இதுபோல சின்ன சின்ன சுவராசியங்கள்தான்…
வாழ்க்கையை சுகப்படுத்துகிறது..

Add Comment