குவைத் எண்ணை நிறுவனத்தில் (KNPC) வாயு கசிந்து 4 தமிழர்கள் பலி, 5 பேர் காயம்

மினா அல் அஹ்மதி : குவைத்தில் உள்ள மிகப் பெரிய எண்ணை உற்பத்தி நிலையமான KNPC-ல் சனிக்கிழமையன்று பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்த போது வாயு கசிந்ததால் 4 தமிழர்கள் பலியானதோடு மூன்று தீயணைப்பு படையினர் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

அன்றாட பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அங்குள்ள குழியில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தீடீரென்று அஜாக்கிரதையால் மூடப்பட்டிருக்க வேண்டிய வால்வை திறந்ததால் இறந்திருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் தீடீரென்று வாயு கசிந்ததால் அதை சுவாசித்த 4 நபர்கள் இறந்தனர் என்றும் சொல்லப்படுகிறது.. இறந்த ராஜாராம், லோகநாதன், ஜானகிராமன், சண்முகம் ஆகிய 4 நபர்களும் தமிழர்கள் என்பதும் குவைத்தின் மிகப் பெரும் கட்டுமான நிறுவனமான கராபி நேஷனலில் பணி புரிகிறவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் மொத்தம் 3 எண்ணை உற்பத்தி நிறுவனங்கள் மினா அல் அஹ்மதி, மினா அப்துல்லா மற்றும் buy Ampicillin online சுஹைபாவில் உள்ளது. இதில் தற்போது தொழிலாளர்கள் இறந்துள்ள மினா அல் அஹ்மதியில் தான் அதிகபட்சமாக 4,60,000 பேரல்கள் தினந்தோறும் எண்ணை உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள 2 உற்பத்தி நிலையங்களும் சேர்ந்து 4.50.000 பேரல்கள் தினந்தோறும் உற்பத்தி செய்கின்றன. இதற்கிடையில் இந்நிகழ்வுக்கு பொறுப்பேற்று எண்ணை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

Source:Inneram

Add Comment