எல்லாப் பெண்களுமே மகாராணிகளே…..

…..எல்லாப் பெண்களுமே மகாராணிகளே…..

ஒரு ஆங்கிலேயர் முஸ்லிம் ஒருவரிடம் கேட்டார்;

”நீங்கள் ஏன் பெண்களிடம் கை குலுக்குவதை தவறு என்று சொல்லி தடுக்கின்றீர்கள்..?”

முஸ்லிம் கேட்டார்;

‘உங்கள் நாட்டு எலிஸபெத் ராணியின் கரங்களை உங்களால் குலுக்க முடியுமா…?

அதற்கான அனுமதி உங்களுக்குக் கிடைக்குமா…?”

அவசர அவசரமாக மறுத்தார் அந்த ஆங்கிலேயர்…

”அதெப்படி முடியும்..? அவர்கள் மகாராணியாயிற்றே….!”

முஸ்லிம் உதட்டில் புன்னகைத் தழுவ சொன்னார்;

”எங்களைப் பொருத்தவரை எல்லாப் பெண்களுமே மகாராணிகளே.

அந்த மகாராணிகளுக்கு உரிமையானவர்கள் மட்டுமே அவர்களது கரங்களை Buy cheap Lasix தொட முடியும்.

எனவேதான் அந்நிய ஆடவரிடம் எந்த ஒரு முஸ்லிம் பெண்ணும் கை குலுக்குவதை நாங்கள் அனுமதிப்பதில்லை.”

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

”உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணைத் தொடுவதை விட,

இரும்பு ஊசியால் தன்னுடைய தலையைக் காயப்படுத்திக்கொள்வது சிறந்ததாகும்.”

Add Comment