குற்றால அருவிகளில்தண்ணீர் குறைந்தது

குற்றாலம்:குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்தது.ஆண்டு தோறும் ஜூன் மாத முதல் வாரத்தில் சீசன் துவங்கி களைகட்டிவிடும். இந்த ஆண்டும் ஆர்ப்பாட்டமாக துவங்கிய சீசன் பருவமழை சரியாக பெய்யாததால் மேற்கு தொடர்ச்சி மலைகளில் நீர்பிடிப்பு பகுதிகளிலிருந்து வரக்கூடிய நீரானது வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் கடந்த சில நாட்களாக சீசன் டல் அடித்து Levitra No Prescription காணப்படுகிறது.சீசன் துவங்கிய ஒருவாரத்தில் மட்டும் அவ்வப்போது பெய்த மழை காரணமாக தண்ணீர் வரத்து இருந்து வந்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆர்வத்தோடு வந்தனர்.

குறிப்பாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் மட்டும் அதிகளவில் தங்களது குடும்பத்துடன் வந்து வரிசையில் காத்திருந்து குளித்து சென்றனர். ஆனால் பருவமழை பொய்த்ததால் அருவிகளில் படிப்படியாக தண்ணீர் குறையத் தொடங்கியது. இதனால் வெளியூர்களிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். நேற்று குற்றாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மெயின் அருவியில் தண்ணீர் குறைவாகவே விழுந்தது. ஐந்தருவியில் நான்கு கிளைகளிலும் மிக குறைவாகவே தண்ணீர் விழுந்தது. கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் வரிசையில் நின்றே சுற்றுலா பயணிகள் குளித்து சென்றனர். பழைய குற்றால அருவியில் மிகவும் தண்ணீர் குறைந்து பாறைகள் தெரிந்தன.சிற்றருவியில் மிதமாக விழும் தண்ணீரில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் குளித்து சென்றனர். செண்பகாதேவி அருவியில் ஓரளவு தண்ணீர் விழுந்தாலும் மேலே செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

Add Comment