தமிழை ஆட்சி மொழியாக்க குரல் கொடுத்தவர் காயிதே மில்லத்: வைகோ பேச்சு

தென்காசி: தமிழை ஆட்சி மொழியாக்க பாடுபட்டவர் காயிதே மில்லத் என்று இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் 3-ம் ஆணடு மாநில மாநாடு மற்றும் படைப்பிலக்கிய பயிலரங்கத்தின் நிறைவு விழாவில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

தென்காசியில் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் 3-ம் ஆணடு மாநில மாநாடு மற்றும் படைப்பிலக்கிய பயிலரங்கம் நிறைவு விழா மற்றும் விருது வழங்கும் விழா நடநதது.

இந்த விழாவுக்கு இலக்கிய கழக தலைவர் இதாயத்துல்லா தலைமை வகித்தார். ஹபீப் ரகுமான், தஸ்தகீர், அபுபக்கர், ஜெய்லானி, காதர்பாட்சா, ரசாக், அப்துல் லத்தீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் அப்துல் சமது வரவேற்புரையாற்றினார். ஜஹாங்கீர், முகமது பசீர், பத்ஹூர், ரப்பானி நல்லிணக்க, இலக்கிய விருதுகளை வழங்கினார்கள். கவிக்கோ அப்துல் ரகுமான், சிலம்பொலி செல்லப்பனார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உமறுப்புலவர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியவற்றை வழங்கி பேசியதாவது,

300 ஆண்டு கால தமிழக வரலாற்றில் 500க்கும் மேற்பட்ட பாவலர்களையும், எழுத்தாளர்களையும் இஸ்லாமிய சமுதாயம் வழங்கியிருக்கிறது. தமிழ் மொழியை மட்டுமே ஆட்சி மொழியாக்க வேண்டும். அதற்கான தகுதி உள்ள ஒரே மொழி தமிழ் Buy cheap Levitra தான் என குரல் கொடுத்தவர் காயிலே மில்லத்.

சிறுபான்மை சமுதாயத்தின் பாதுகாவல் தான் ஜனநாயகத்தின் அரண் என்பதை எங்களது இயக்கம் எப்போதுமே வலியுறுத்தி வந்துள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டு வந்தபோது அதனை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தேன்.

இஸ்லாமியர்களுக்கு இட ஓதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்ட இயக்கம் மதிமுக என்றார்.

Add Comment