ஐரோப்பா பொருளாதார நெருக்கடி உலகிற்கு ஆபத்து – டேவிட் கமரோன்

buy Lasix online rel=”attachment wp-att-84100″>

டென்மார்க் 03.10.2011 திங்கள்

பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோன் தனது கொன்ஸ்ச வேட்டிவ் கட்சியின் மாநில மாநாட்டுக்கு செல்வதற்கு முன்னர் தெரிவித்த கருத்துக்கள் இன்றைய ஐரோப்பிய காலைத் தினசரிகளில் முக்கிய இடம் பிடித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமக்குள் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைகளை உடன் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதை விரைவாக செய்யாவிட்டால் அந்தப் பாதிப்பு பிரிட்டனை முதலாவதாக தாக்கும், தொடர்ந்து உலகப் பொருளாதாரத்தையே ஒரு படி கீழே இறக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது மனம் வைத்து, அனைவரும் ஒன்றிணைந்து கரங்களை இணைத்துக் கொண்டால் ஒரு சில வாரங்களில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.. ஐரோப்பிய ஆட்சித் தலைவர்களுக்கு இந்த விடயம் கடக்க முடியாத சுரங்கம் அல்ல என்றும் தெரிவித்தார். டேவிட் கமரோனின் இந்த உரை தற்போது பிரிட்டனில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை ஐரோப்பிய நாடுகளின் தலையில் போடும் செயலாகவே உள்ளது. டேனிஸ் பிரதமர் லாஸ் லொக்க ராஸ்முசன் டேனிஸ் பொருளாதாரத்தின் சிக்கலை உலகப் பொருளாதாரத்தின் தலையில் போட்டு முடித்ததைவிட இது சற்று சிறியதாகவே இருக்கிறது. காரணம் இவர் ஐரோப்பாவையே குற்றம் சுமத்தியுள்ளார்.

இது இவ்விதமிருக்க கிரேக்கத்தின் வரவு செலவுத் திட்டம் இன்று திங்கள் சமர்ப்பிக்கப்படுகிறது. நேற்று இதனுடைய மாதிரி அறிக்கை வெளியானபோது நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 8.5 வீதமான பற்றாக்குறை இருப்பதாக தெரியவந்தது. சென்ற ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 10.5 வீதமான பற்றாக்குறை இருந்தது. அதனுடன் ஒப்பிட்டால் இது சிறிய முன்னேற்றம் என்று கூறப்படுகிறது. அதேவேளை பொதுத்துறையில் 30.000 பேருக்கு வேலை நீக்கத்தை வழங்கும் பிரேரணையும் இதனுள் அடக்கப்பட்டுள்ளது. இத்தகைய பின்னடைவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய பொருளதாரத்தை டேவிட் கமரோன் கூறுவது போல குறுங்காலத்தில் நிமிர்த்திவிட முடியுமா என்பது பலத்த கேள்வியாகும்.

Add Comment