துபாயில் 2 -ஆம் உலகத்தமிழர் பொருளாதார மாநாடு

துபாயில் 2 -ஆம் உலகத்தமிழர் பொருளாதார மாநாடு

துபாயில் இரண்டாம் உலகத் தமிழ்ர் பொருளாதார மாநாடு அக்டோபர் 02ம் தேதியன்று காலை வெகு சிறப்பாக தொடங்கியது. மாநாட்டினை இந்திய அமைச்சர் வீரப்ப மொய்லி துவக்கி வைத்து விழாப் பேருரை நிகழ்த்தினார். மாநாட்டு அமைப்புக் குழு தலைவர் முனைவர் சம்பத் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாநாட்டில் மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு, இந்திய தூதர் எம்.கே. லோகேஷ், இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா, ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் சையது எம்.ஸலாஹுத்தீன், நீதியரசர் ஏ.ஆர்.இலட்சுமணன், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான், அழகிரி, ஜின்னா, தொழிலதிபர்கள் வீரமணி, சித்தார்த் பாலச்சந்திரன், மலேசிய துணைத் தூதர் சம்சுதீன், தோஹா வங்கி தலைமை நிர்வாக அதிகாரி சீத்தாராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேஷியா, ஓமன், கத்தார் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ் வணிகப் Bactrim online பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தகவல் : அபு ஆஸிமா

Add Comment