குடிகெடுக்கும் தொடர்கள்…

குடிகெடுக்கும் தொடர்கள்…

செல்லம்மே தொடரில் வரும் செல்லம்மா என்ன செய்கிறாள் என்று கேட்டவுடன் சட்டென பதில் சொல்லும் நம் பெண்களுக்கு, தன் பிள்ளை என்ன படிக்கிறது என்று கேட்டவுடன் பதில் சொல்வதற்கு ஆழ்ந்தயோசனை செய்யவேண்டியிருக்கிறது….

அந்தஅளவிற்கு சின்னத்திரை தொடர்களில் நம்பெண் சமுதாயம் மூழ்கிகிடக்கிறது என்றால் அது மிகையில்லைதான்…

படித்தவர்கள், பாமரர்கள் என யாரையும் விட்டுவைக்கவில்லை
இந்த சின்னத்திரை நெடுந்தொடர்கள்…….

வஞ்சகத்தோடு வார்த்தைகளை வீசும் மாமியாரும்…
மாமியாரை பழிவாங்கத்துடிக்கும் மருமகளும்..,
மனைவி மீது சந்தேகப்படும் கணவனும்..
கணவனை கொலைசெய்யத்துடிக்கும் மனைவியும்…
இப்படிசொல்லமுடியாத அளவிற்கு கேவலமாக மனித உறவுகளை கொச்சைப்படுத்துதல், வன்மம், குரோதம்,காமம்..இதைத்தவிர வேற எதையுமே நாம் அதில் பார்க்கமுடியவில்லை….

“நம் ஊர்களில் பெரும்பாலும் பிள்ளைகள் தாயின் அரவணைப்பில்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன…
ஆனால் தன் குழந்தையின் படிப்பின்மீதும் எதிர்காலத்தின் மீதும் அக்கறை செலுத்தாமல் இந்த சின்னத்திரை நெடுந்தொடர் கலாச்சாரத்திலும்
அனாச்சாரங்களிலும் மயங்கிகிடக்கினறனர்….

இதுபோன்ற சின்னததிரை தொடர்கள்
மனதிற்குள் நஞ்சைவிதைத்து நம்மை மதிகெடச்செய்கிறது…

buy Levitra online style=”text-align: justify;”>குடி குடியை கெடுக்கும் என்பது தமிழனின் பழைய மொழி…
சின்னத்திரை நெடுந்தொடர்கள்
குடியை கெடுக்கும் என்பது
இப்போதைய நிஜமொழி….

விழித்தெழுவோம் மீட்டெடுப்போம்….

Add Comment