ஐக்கிய அரபு அமீரகத்தில் தமிழர்களுக்கு தனி வங்கி தேவை

ஐக்கிய அரபு அமீரகத்தின் no prescription online pharmacy துபை நகரத்தில் இரண்டாவது தமிழர் பொருளாதார மாநாடு அக்டோபர் 1 முதல் அக்டோபர் 4 வரை உலக வர்த்தக மையத்தில் நடைபெற்று வருகிறது.

“இன்று அரசாங்க உதவிகளும் சமூக ஒருங்கிணைப்பும்” என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற அமர்வில் தமிழகத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்ரஹ்மான், ராஜ்ய சபா உறுப்பினர் ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு மௌரிசியசைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் தலைமை தாங்கினார். இவர் யுனெஸ்கோ அமைப்பின் முன்னாள் இயக்குனரும் ஆவார்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் வணிக அமைப்பின் தலைவர் சோழ நாச்சியார் ராஜசேகர் “தமிழர்களுக்கென தனி வங்கி ஒன்றை அமைக்க தமிழ் செல்வந்தர்கள் முன்வரவேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். அதுபோல் “உலகெங்கும் இருக்கும் தமிழ் வணிகர்களின் விபரங்கள் அடங்கிய ஒரு தொகுப்பைக் கொண்டு வர வேண்டும்” என்றும் “இதனால் தமிழ் வணிகர்களுக்குள் தொடர்புகள் அதிகரிக்கும்” என தெரிவித்தார்.

“இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என இந்த மாநாட்டின் அமைப்பாளர் சம்பத் தெரிவித்துள்ளார்.

Add Comment