7 மாவட்ட அதிகாரிகளுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை

சென்னை : தமிழகத்தில் அக்டோபர் 17, 19ம் தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தலைமையில், சென்னையில் மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் அலுவலர்கள், கலெக்டர்கள், சென்னை மாநகராட்சி கமிஷனர், மாவட்ட எஸ்.பிக்கள், காவல் துறை ஆணையர்கள் கலந்து கொண்டனர்.

மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சேவியர் கிறிசோநாயகம், சென்னை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், திருவள்ளூர் கலெக்டர் ஆஷிஷ் சட்டர்ஜி, காஞ்சிபுரம் கலெக்டர் சிவசண்முக ராஜா, வேலூர் கலெக்டர் நாகராஜன், விழுப்புரம் கலெக்டர் மணிமேகலை, Buy cheap Amoxil திருவண்ணாமலை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, கடலூர் கலெக்டர் அமுதவள்ளி, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி, வடக்கு மண்டல ஐ.ஜி. சைலேந்திரபாபு உள்ளிட்ட 23 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. வாக்குச் சாவடிகளை தயார் நிலையில் வைப்பது, தேர்தல் பணியாளர்களை உறுதி செய்வது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தயாராக வைத்திருப்பதை ஆய்வு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கப்பட்ட விவரங்கள், பூத் சிலிப், தேர்தல் பார்வையாளர்களின் பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. வாக்குப் பதிவு நாளன்று வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். வாக்காளர்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும். பதற்றமான வாக்குசாவடிகளை கண்டறிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஊடகங்களுக்கு தேர்தல் குறித்து தகவல்கள் அளிக்க  வேண்டும் என்று தேர்தல் ஆணையர் அய்யர் வலியுறுத்தினார்.

உள்ளாட்சி தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு மத்திய போலீஸ் வருகை

வாக்குப்பதிவு செய்யும் இரண்டு நாட்கள் மற்றும் வாக்குப்பெட்டிகள் பாதுகாக்கப்படும் இடங்களிலும், வாக்கு எண்ணிக்கையின்போதும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். ஏற்கனவே காவல் துறை இயக்குநரோடு நடத்தப்பட்ட கூட்டத்தில் முடிவு செய்ததுபோல் பிற மாநிலங்களில் இருந்தும், மத்திய தொகுப்பில் இருந்தும் பாதுகாப்பு பணிக்காக போலீசாரை வரவழைக்க வேண்டும். சென்னையை பொறுத்தமட்டில் அனைத்து வாக்குச்சாவடிகளையும் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கருதி, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

கடந்த 2006ம் ஆண்டு தேர்தலின்போது பல வாக்குப்பெட்டிகள் தெருவில் கிடந்தது என்று ஊடகங்களிலும், நீதிமன்ற தீர்ப்பிலும் கூறப்பட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பை மிக கவனமாக உணர்ந்து, நடக்க உள்ள தேர்தலில் எந்த குறையும் இல்லாமல் மிக நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெற மாவட்ட ஆட்சி தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையர் சோ.அய்யர் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

Add Comment