வேட்பாளரை மாற்றியதால் ஆத்திரம் சத்தியமூர்த்தி பவன் சூறை

சென்னை :  மாநகராட்சி 114வது வார்டு அன்பழகன் அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தன்னை நீக்கி விட்டு, அன்பழகனை வேட்பாளராக அறிவித்ததாக கூற¤ முருகவேல் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் நேற்று முன்தினம் இரவு சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரை கிழித்து எறிந்தனர். நேற்று காலை மீண்டும், சத்தியமூர்த்தி பவனுக்கு முருகவேல், அவரது ஆதரவாளர்கள் 40 பேர் வந்தனர். சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் அமர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் காங்கிரஸ் கொடியை அகற்றி, கறுப்புக் கொடியை ஏற்ற முயன¢றனர். இதற்கு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தனர். கறுப்புக் கொடி ஏற்றி கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தி விடாதீர்கள் என சமாதானம் பேசினர். அப்போது, தங்களுடன் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைத்தனர். அரை மணி நேரம் அவகாசம் கொடுத்தனர். யாரும் பேச்சுவார்த்தை நடத்த வராததால் ஆத்திரமடைந்த இளைஞர் காங்கிரசார், சத்தியமூர்த்தி பவனுக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். நாற்காலிகளை உடைத்து எறிந்தனர். கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். பின்னர் தங்கபாலு போட்டோவை உடைத்தனர்.

இதனால் பதற்றம் ஏற்பட்டது. இந்த தகவலை அறிந்தவுடன் தங்கபாலு ஆதரவாளர்கள திரண்டு சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, தலைமை நிலைய செயலாளர் மக்பூல்ஜான் அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து முருகவேல் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இளைஞர் காங்கிரஸ் பகுதி செயலாளராக பதவி வகித்து வருகிறேன். இளைஞர் காங்கிரசுக்காக 114வது வார்டு ஒதுக்கப்பட்டது. அதன்படி எனக்கு இந்த வார்டு ஒதுக்கப்பட்டது. அதற்கான அங்கீகார படிவத்தையும் தங்கபாலு கொடுத்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வேட்புமனு பரிசீலனைக்கு சென்றபோது, Buy Amoxil எனது பெயருக்கு பதிலாக இந்த வார்டுக்கு சம்பந்தம் இல்லாத, துறைமுகம் தொகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். தங்கபாலுவும், மாவட்ட தலைவர் கோவிந்தசாமியும் எனக்கு துரோகம் செய்து விட்டனர். இதுகுறித்து கட்சி தலைமை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்ÕÕ என்றார்.

3 பேர் நீக்கம்  தங்கபாலு அறிவிப்பு

கட்சியின் ஒழுங்கு கட்டுப்பாட்டை மீறியும், மாறாத களங்கம் கற்பிக்கும் வகையிலும் நடந்து கொண்ட காரணத்தால், சேப்பாக்கத்தைச் சேர்ந்த ரயான் பஷீர், முருகவேல், அப்பாஸ் ஆகிய 3 பேர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகின்றனர். தங்கபாலு ஒப்புதலுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கு தேர்தல் சூறை

காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட சத்தியமூர்த்தி பவன் இன்று தேர்தலுக்கு தேர்தல் சூறையாடப்படுவது மூத்த காங்கிரசாருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத செங்கை செல்லப்பா ஆதரவாளர்கள் சூறையாடினர். இந்த தேர்தலில் இளைஞர் காங்கிரசார் சூறையாடியுள்ளனர். தேர்தலுக்கு தேர்தல் நடக்கும் சம்பவத்துக்கு யார் பொறுப்பு என்பது காங்கிரசார் பலரின் கேள்வியாக உள்ளது.

Add Comment