லஞ்சம் வாங்கினால் விரட்டி விரட்டி அடிப்பேன் – விஜயகாந்த்!

“தேமுதிகவினர் லஞ்சம் வாங்கினால் விரட்டி விரட்டி அடிப்பேன்” என நெல்லையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

நெல்லை மாநகராட்சி தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பாளை லூர்துநாதன் சிலை அருகில் பிரசாரம் செய்து விஜயகாந்த் பேசியதாவது:

“அரசியல், Buy cheap Viagra கல்வி, வேலை வாய்ப்பில் பெண்கள் பின்தங்கி உள்ளனர். பெண்கள் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றமாகும். நெல்லை மாநகராட்சி பின்தங்கிய நிலையில் உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லை. சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. குடிநீர் பிரச்சனை உள்ளது. தாமிரபரணியில் மணல் அள்ளப்பட்டதால் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.

மாநகராட்சி பிரச்சனைகளுக்குத் தீர்வு காண தேமுதிகவுக்குப் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் உள்ளாட்சியில் நல்லாட்சியாக அமையவில்லை. ஆகவே தேமுதிகவுக்கு ஒரு முறை வாய்ப்பு அளியுங்கள். தேமுதிக தலைமையில் ஊழல் மற்றும் லஞ்சம் இல்லாத நல்லாட்சி அமைக்கப்படும். எங்கள் கட்சிக்கு ஓட்டளித்தால் லஞ்ச, ஊழலை விரட்டி அடிப்போம். எங்கள் கட்சியினர் யாராவது லஞ்சம் வாங்கினால் என்னிடம் கூறுங்கள். அவர்களை ஓடவிட்டு விரட்டி விரட்டி அடிப்பேன்.”

இவ்வாறு அவர் பேசினார்

Add Comment