நடிகை வீட்டு மது விருந்தில் பின்புறமாக வெளியேறிய காவல்துறையினர்!

அக்கம் பக்கத்தினரைத் தூங்கவிடாமல் காதைப்பிளக்கும் பாடல், ஆட்டம் என நடிகை வீட்டில் நடந்த மது விருந்து தொடர்பாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து அங்கு நுழைந்த காவல்துறையினர், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வீட்டுப் பின்புறமாக வெளியேறினர்.

இந்தி நடிகை தீபிகா படுகோனே. இவர் மும்பை பிரபாதேவி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 26-வது தளத்தில் புதிதாக வீடு வாங்கி இருக்கிறார். இதனைக் கொண்டாடுவதற்காக மும்பை திரைப்பட உலகின் பிரபலங்களுக்குக் கடந்த சனிக்கிழமை இரவு தனது வீட்டில் பிரமாண்ட மது Viagra No Prescription விருந்து ஒன்று அளித்தார்.

இந்த விருந்தில் அமிதாப்பச்சன், பிரியங்கா சோப்ரா, இம்ரான்கான், கரண் ஜோகர், சகீத் கபூர், அனுஷ்கா சர்மா, ரன்வீர் சிங், ரிதேஷ் தேஷ்முக், ஜெனிலியா, தொழில் அதிபர் சித்தார்த் மல்லையா, அவரது தந்தை விஜய் மல்லையா என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நள்ளிரவைத் தாண்டி அமோகமாக நடந்தகைந்த மதுவிருந்தில், காதைப் பிளக்கும் ஒலியில் பாடல்கள் இசைக்கப்பட்டன. அதிகாலை 3 மணி வரை உயர் ரக மதுக்கள் பரிமாறப்பட்டன. ஆட்டம், பாட்டம் என விருந்து களை கட்டியது. இதனால் அக்கம்பக்கதாரின் தூக்கம் பறிபோனது.

இது தொடர்பாக காவல்துறையினருக்குப் புகார் சென்றதாக தெரிகிறது. அதிகாலை 3.15 மணிக்குக் காவல்துறை ரோந்து வேன் ஒன்று அவருடைய வீட்டின் முன் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய காவல்துறை அதிகாரி ஒருவர் நேராக தீபிகாவின் வீட்டினுள் சென்றார். அக்கம்பக்கத்தாருக்கு எந்த விதமான தொந்தரவும் தராமல் விருந்தினை நடத்துங்கள் என்று தீபிகாவுக்கு அவர் அறிவுரை கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

சிறிது நேரத்திற்குப் பின்னர் மற்றொரு வேனில் சாதாரண உடை அணிந்த காவல்துறையினர் வந்து திபுதிபுவென தீபிகாவின் வீட்டினுள் புகுந்தனர். இதனால் அங்குப் பரபரப்பு தொற்றியது. ஆனால், அவர்களும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வந்த வேகத்தில் வெளியேறினர். தீபிகாவின் வீட்டு முன் பக்க கேட்டின் அருகே பத்திரிகையாளர்கள் இருந்ததால் கேள்விகள் எழுப்பக்கூடும் என்பதற்காக, முன்புற வாசல் வழியாக வீட்டினுள் நுழைந்த காவல்துறையினர் பின்புற வாசல்வழியே வெளியேறி விட்டனர்.

இது தொடர்பாக தாதர் காவல் நிலையத்தில் அதிகாரி ஒருவரிடம் விசாரித்தபோது, “அங்கு ஏராளமானோர் கூடியிருந்ததாக தகவல் கிடைத்தது. அங்குச் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எதுவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் எங்கள் படசங்குச் சென்றது. மற்றபடி வேறொன்றுமில்லை” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

 

Add Comment