மாநகராட்சி தேர்தல் பணவிநியோகம் தடுக்க 2 பறக்கும் படை குழு அமைப்பு

திருநெல்வேலி : நெல்லை மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு பண விநியோகம், இலவச பொருட்கள் வழங்கல், கறிவிருந்து தடை செய்ய தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் சோமசுந்தரம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் 2 போலீசார், ஒரு வீடியோகிராபர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.உதவி வருவாய் அலுவலர் வெங்கட்ராமன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்குமார் மற்றும் 2 போலீசார் மற்றும் வீடியோகிராபர் அடங்கிய பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.சோமசுந்தரம் தலைமையிலான பறக்கும்படையினர் நெல்லை, மேலப்பாளையம் மண்டல பகுதிகளிலும், வெங்கட்ராமன் தலைமையிலான பறக்கும் படையினர் தச்சநல்லூர், பாளை., மண்டல பகுதிகளிலும் சோதனையில் ஈடுபடுவர்.மண்டபங்களில் கறிவிருந்துக்கு தடைதிருமண மண்டபங்கள் மற்றும் வீடுகளில் கூட்டங்களை திரட்டி மது கொண்டாட்டம், கறிவிருந்து நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண வரவேற்பு, சடங்கு, ஓய்வு பெறுதல் பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளுக்கு போலீசாரிடம் முன் அனுமதி பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பறக்கும் படை சோதனைதேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்ட பறக்கும் Lasix online படையினர் நெல்லை எஸ்.என்.ஹைரோட்டில் நேற்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் 18004257401 என்ற நம்பரில் தொடர்பு கொண்டு புகார்களை கூறலாம் என தெரிவிக்கப்பட்டது.

Add Comment