இலஞ்சி டவுன் பஞ்.,தேர்தல் அதிமுக-திமுக இடையே பரபரப்பான போட்டி

தென்காசி : இலஞ்சி டவுன் பஞ்.,தலைவர் தேர்தலில் 7 முனை போட்டி ஏற்பட்டாலும் அ.தி.மு.க.,-தி.மு.க.,வேட்பாளர்களுக்கிடையே பரபரப்பான போட்டி உருவாகியுள்ளது.தென்காசி யூனியன் பகுதியில் வயல்கள், தோப்புகள் சூழ்ந்த பகுதியாக இலஞ்சி விளங்குகிறது. இங்கு வசிக்கும் பொதுமக்களில் 90 சதவீதத்திற்கு மேல் படித்தவர்கள். இலஞ்சி டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு காத்தவராயன் (அதிமுக), முத்தையா (திமுக), அங்கப்பன் (காங்.,), குமாரசுப்பிரமணியன் (தேமுதிக), பிச்சையா (சுயேட்சை), குமரபெருமாள் (சுயேட்சை) போட்டியிடுகின்றனர். 15 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 79 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.அ.தி.மு.க., தி.மு.க.,வேட்பாளர்கள் இடையே பரபரப்பான போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் தி.மு.க.வில் சீட் கிடைக்காமல் சுயேட்சையாக தற்போதைய டவுன் பஞ்.,தலைவர் பிச்சையா போட்டியிடுகிறார். இம்மூவருக்கும் இடையே மிகுந்த பரபரப்பான போட்டி ஏற்பட்டுள்ளது. இப்போட்டியில் தான் வெற்றி பெற்றால் டவுன் பஞ்.,பகுதிக்கு செய்யும் வளர்ச்சி பணிகள் குறித்து அ.தி.மு.க.வேட்பாளர் காத்தவராயன் கூறியதாவது:””இலஞ்சி பகுதி மக்களுக்கு தினசரி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பேன். இதற்காக கூடுதலாக குடிநீர் தொட்டி அமைக்கப்படும். குற்றாலம் குடிநீர் அனைத்து பகுதி மக்களுக்கும் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வேன். 15வது வார்டு பகுதியில் கழிப்பிட வசதி மற்றும் தேவைப்படும் இடங்களில் சுகாதார வளாகங்கள் கட்டப்படும்.கால்நடை buy Lasix online ஆஸ்பத்திரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். சாலை வசதி மேன்மை படுத்தப்படும். தெரு விளக்குகள் சீராக எரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வல்லம் ரோட்டில் பஸ்ஸ்டாண்ட் அமைக்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சுழல் நிதி, கடனுதவி எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுய உதவி குழுவினருக்கு சுய தொழில் செய்வதற்காக கதர் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியனிடம் கூறி ஏற்பாடு செய்யப்படும்.குளங்கள், கால்வாய்கள் சீரமைக்கப்படும். ஐந்தருவி இலஞ்சி டவுன் பஞ்., நிர்வாகத்துடன் இணைக்க பாடுபடுவேன். தி.மு.க.ஆட்சியில் சுகாதார வசதி மோசமாக இருந்தது. இதனை மாற்றியமைத்து சுகாதாரம் மிகுந்த பகுதியாக மாற்றப்படும். குண்டாற்றில் சாக்கடை கலப்பது தடுக்கப்படும். ஆற்றில் படித்துறை அமைக்கப்படும். சுடுகாட்டு பாதை சீரமைக்கப்படும். முதலாளிகுடியிருப்பில் சுடுகாடு பாதை, பாலம் அமைக்கப்படும்.நெல் களம் அமைக்கப்படும். முதல்வர் ஜெயலலிதாவின் இலவச திட்டங்கள் அனைத்தும் ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் வழங்கப்படும். மண்பாண்ட தொழிலுக்கு புத்துயிர் அளிக்கப்படும். அத் தொழில் மேன்மையடைய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க.உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களையும் எளிதில் வெற்றி பெற்று இப்பணிகளை செய்வேன்” என்றார் காத்தவராயன்.தான் வெற்றி பெற்றால் டவுன் பஞ்.,பகுதிக்கு செய்ய இருக்கும் பணிகள் குறித்து தி.மு.க.வேட்பாளர் முத்தையா பட்டியலிட்ட விபரம் வருமாறு: “”கடந்த தி.மு.க.ஆட்சியில் இலஞ்சி டவுன் பஞ்.,பகுதிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன. நான் வெற்றி பெற்றதும் குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பேன். தினமும் குடிநீர் வினியோகம் நடக்கும். சாலை வசதி மேன்மைபடுத்தப்படும், வாறுகால்கள் தினசரி சுத்தம் செய்யப்பட்டு சுகாதாரம் மிகுந்த பகுதியாக பராமரிக்கப்படும்.தென்றல் நகரில் வாறுகால் அமைக்கப்படும். முதலாளிகுடியிருப்பு பொதுமக்கள் ஆற்றில் குளிக்க செல்வதற்கு பாதை வசதி ஏற்படுத்தப்படும். ஆற்றில் கழிவு பொருட்கள், சாக்கடை நீர் கலப்பது தடை செய்யப்படும். 14வது வார்டு பகுதியில் சாலை வசதி செய்யப்பட்டு சமுதாய நலக்கூடம் அமைக்கப்படும். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.மின் தடையை சரிசெய்யும் வகையில் அனைத்து வீடுகளிலும் சூரிய ஒளி மின் வசதி செய்து இருள் இல்லாத இலஞ்சியை உருவாக்குவேன். பெண்கள் தொழில்நுட்ப கல்லூரி அமைப்பேன். அனைத்து வார்டுகளிலும் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் சிறு மின் விசை பம்பு மற்றும் சின்டெக்ஸ் டேங்க் அமைத்து தண்ணீர் வினியோகம் செய்வேன். அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு வருவேன்.கழிப்பிட வசதி இல்லாத வீடுகளில் கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுப்பேன். அடிப்படை வசதிகள் முழுவதும் செய்து கொடுத்து இலஞ்சியை முதன்மை டவுன் பஞ்.,பகுதியாக மாற்றி காட்டுவேன். பொதுமக்கள் தங்களுடைய பிரச்னைகளை எந்த நேரம் என்றாலும் என்னுடன் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பிரச்னைகள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் முத்தையா.தி.மு.க.விற்கு போட்டியாக களம் இறங்கியுள்ள பிச்சையா தான் வெற்றி பெற்றால் செய்யும் பணிகள் குறித்து கூறியதாவது:””கடந்த 5 ஆண்டுகளில் இலஞ்சி டவுன் பஞ்.,பகுதியில் 5 கோடிக்கும் மேல் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலஞ்சியை முழு சுகாதாரம் பெற்ற பகுதியாக மாற்றுவதே எனது லட்சியம். அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு கிடைத்திட முன்னுரிமை கொடுப்பேன். குடிநீர் பிரச்னையை போக்குவேன். இதற்காக ஐந்தருவியில் இருந்து இலஞ்சிக்கு குடிநீர் கொண்டு வருவேன்.அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை ஆஸ்பத்திரி, பஸ்ஸ்டாண்ட் அமைக்கப்படும். வார்டுகள் தோறும் ரோடு சீரமைக்கப்படும். படித்துறை மேன்மைபடுத்தப்படும். கடந்த ஆண்டு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தனியார் உதவியுடன் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கினேன். இந்த ஆண்டு க

Add Comment