இந்தியாவின் அந்நிய செலவாணியில் அரபுநாடுகளில் வாழும் இந்தியர்களின் பங்கு அதிகம்

இந்தியாவின் அந்நிய செலவாணியில் அரபுநாடுகளில் வாழும் இந்தியர்களின் பங்கு அதிகம் : மத்திய அமைச்சர் நாராயணசாமி

இரண்டாவது உலகத்தமிழர் பொருளாதார மாநாடு கடந்த அக்டோபர் -1 முதல் அக் -4 வரை துபாயில் நடைபெற்றது .அக்- 4 அன்று நடைபெற்ற இறுதி நிகழ்ச்சிக்கு திரு.சம்பத் தலைமை தாங்கினார் .காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துல்ரகுமான் எம்.பி, முஹம்மது அலி ஜின்னா எம்.பி, ஆற்காடு நவாப் அப்துல் அலி , நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் உரையாற்றியபின்பு , மத்திய அமைச்சர் நிறைவு பேருரை யாற்றினார் . அவர் தமது உரையில் , இன்றயகாலகட்டத்தில் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை கணிகிடும்போது அமெரிக்கா 2 % மும் , ஐரோப்பிய நாடுகள் பூஜ்ஜியம் முதல் ஒரு சதவீதமும்தான் பொருளாதார வளர்ச்சியடைந்துள்ளன .ஆனால் இரண்டு நாடுகள் மட்டுமே நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளன , சீனா 11 % வளர்ச்சியும் , நமது இந்தியா 9 % வளர்ச்சியும் அடைந்துள்ளன .
இந்தியாவில் Buy Cialis உற்பத்தி செய்யபடும் உணவுப்பொருட்களை பாதுகாத்து வைப்பதற்கு போதிய கிட்டங்கிகள் இல்லை , எனும் அளவிற்கு நமது நாட்டின் உணவு உற்பத்தி நிலை உள்ளது .2010 – 2011 ஆண்டு கணக்கில் இந்தியாவில் 234 பில்லியன் டன் உணவு உற்பத்தி செய்யப்படுள்ளது .இந்தியாவில் உள்ள 65 % மக்களுக்கு இலவாசமாக உணவு தானியங்கள் கொடுக்கலாம் . 10 % முதல் 11 % வரை தொழில் வளர்ச்சி நம் நாடு அடைந்துள்ளது .
ஏற்றுமதியின் மூலம் 200 பில்லியன் டாலரும் ,அந்நிய செலவாணி மூலம் 200 பில்லியன் டாலரும் நம் நாட்டிற்கு வருமானம் வருகின்றது .அதிகமாக அந்நிய செலவாணி வருவாய் அரபு நாடுகளில் வாழும் இந்தியர்கள் மூலம்தான் கிடைக்கின்றது .
இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனகள் இந்தியாவில் உலகளாவிய கம்பனிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றது .இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு .20 வயது முதல் 35 வயது வரை உள்ள மக்களின் 65 % மனிதவளம் நம் நாட்டின் மிகப் பெரிய சக்தி என்பது ஒரு காரணமாகும் . மற்றொன்று ,நம் நாட்டு மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது .
இந்தியாவில் மோட்டார் வாகன உற்பத்தியில் தமிழகம் முதல் இடத்தை பெறுகின்றது .அவற்றிற்கு முதல் காரணி உதிரி பாகங்கள் உற்பத்தியாகும் . மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியில் அமீரகத்தில் வாழும் அனைத்து தர மக்களும் அதிக முதலீடு செய்யலாம் .
இந்தியாவின் பொருளாதாரம் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது .2008 – 2009 ஆண்டில் அமெரிக்கா உள்பட அழகா நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த போது ,நம் தாய்நாடு இந்தியா 7 % பொருளாதார வளர்ச்சியை பெற்றது . ஆனால் ,ஊடகங்கள் உலகளாவிய நிலையில் இவற்றை மறைகின்ற இந்த காலகட்டத்தில் ,எனக்கு பாதாம் பிடித்து காட்ட வாய்ப்பளித்த மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு என்மனமார்ந்த நன்றியை கூறிகொள்கிறேன்.
மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு , துபாய் காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் லியாகத் அலி , பொதுசெயலாளர் தாஹா , பொருளாளர் ஹமீது ரகுமான் , ஹமீது யாசீன் , எஸ்.கே.எம்.ஹபிபுல்லா ,உள்ளிட்ட கத்தார் , குவைத் ,மலேசியா , சிங்கபூர் , கலிபோர்னியா , எதியோப்பியா , லண்டன், ஓமான் ஆகிய நாடுகளிலிருந்து வந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் .

செய்தி தொகுப்பு : அபு ஆஸிமா

Add Comment