உலகம் எப்போது சூட்சமம் அடைந்தது….

உலகம் எப்போது சூட்சமம் அடைந்தது….

குறைஷி இனத்தில் ஒரு சாதாரண மனிதனாகத்தான் தோன்றினார் அவர்
ஒட்டகம் மேய்ப்பதுதான் அவருக்கு
கொடுக்கப்பட்ட வேலையாக இருந்தது…கதிரவன் அதிகம் நேசிக்கும் பாலைவன அரபுதேசத்தின்
மலைக்குன்றுகள் அவர் அமரும் இடமாக கூட இருந்தது…

ஆனால் அவருக்கு தெரியவில்லை அவர்தான் இந்த உலகத்தை மாற்ற வந்த தீர்க்கதரசி என்று…தனது 39 வயது முடியும் தருவாயில் அழகிய கனவுகள் அவரை ஆட்கொண்டன..
அந்த கனவுகள் அவரை மக்களிடம்
இருந்து சற்று தனிமைப்படுத்தியது
ஹிரா குகையில் தியானத்தின் பாதையில் அவர் மனம்சென்றது…

சங்கைமிக்க ரமலான் மாதத்தில் ஒருநாள்,அவர் 40 வயதை அடைந்திருந்தார்,அன்று யாருக்கும் தெரியாது அந்தநாள் உலகத்தையே மாற்றப்போகும் நாள் என்று…
அவரின் கால்கள் ஹிரா குகையை நோக்கி நடக்கின்றன…
புதிதாய் ஒரு பரவசத்தை உணர்ந்தார்…தியானத்தோடு ஹிரா குன்றுகளில் அமர்ந்திருக்க அவர் உடலில் ஏதோ ஒன்று பின்னப்படுவதை
உணர்ந்தார்…” நீர் ஓதுவீராக” காதுகளில் கேட்டது அந்த குரல் என்னால் முடியவில்லை என்றார்…
அவர் உடல் மீண்டும் அழுத்தப்படுவதை உணர்ந்தார்…ஓதுவீராக மீண்டும் அந்தகுரல்…என்னால் முடியவில்லை என்றார்…
மரணம்வந்தது போல் உடல்வலித்தது
மூனறாம்முறை ஓதுவீராக என்றது பின் ஜீப்ராயில் கட்டித்தழுவினார்கள்
நீண்ட மவுனம் பின் அவர் ஓத ஆரம்பித்தார்…

அவர்தான் MOHAMED…
அறியாமையை இருளை
அடியோடு அகற்ற இறையருள்
அருளப்பட்ட அன்றுதான் அன்றுதான்

உலகம் சூட்சமம் அடைந்தது…

buy Viagra online justify;”>உடலில் அன்று அவருக்கு ஏற்ப்பட்ட
வலிதான்…நமக்கு வாழ்க்கையின்
வழியை காட்டியது…

உலகத்தில் மற்றவர்களைவிட
அவரை அதிகம் நேசிப்போம்
நாம்……..

Add Comment