உதைத்திடுவோம் வாருங்கள் ! (பீ எம் கமால்,கடையநல்லூர்)

உதைத்திடுவோம் வாருங்கள் !
(பீ எம் கமால்,கடையநல்லூர்)

இயக்கங்களின்
அடிதடியில்
பாவம் நமது
ஒற்றுமை
காணாமல் போய்விட்டது !

கலிமாவின் கயிற்றில்
கட்டுண்ட முஸ்லிம்கள்
இன்று
கண்ட கண்ட கயிற்றில்
கழுத்தை நுழைத்ததினால்
மூச்சுத் திணறி
முனங்குகிரார்கள் !

வழி நடத்தும்
தலைவர்களோ
கோடியில் புரண்டு
கொள்கை இழக்கிறார்கள் !

வறுமையே எனக்குப்
பெருமை என்ற நாயகத்தை
வர்த்தக லேபிலாய்ப்
பயன்படுத்து கின்றார்கள் !

Levitra online justify;”>இயக்கங்கள் எல்லாம்
முதலீடு இல்லாத
முழு வியாபாரமாய்ப்
பரிணாமம் பெற்று
பரிமளிக்கின்றன !

முட்டாள் சகோதரன்
அள்ளிக் கொடுப்பதால்
அல்லவா இந்தப்
பகற்கொள்ளை பேர்வழிகள்
பகட்டாய் நட மாடுகிறார் !

முஸ்லிம் சமுதாயமே!
நீ
ஏமாளிச் சமூகமாய்
ஏன் மாறிப் போனாய் ?

உப்புக் கல்லை
வைரமென்று
ஒப்புக்கொண்டாயே
ஏன் ?

அந்நியனிடம் தான்
அநியாயமாய்
ஏமாந்தாய் !
சொந்தங்களிடமும்
சோரம் போகலாமா ?

அள்ளிக் கொடுத்துவிட்டு
கொள்ளை போகுதென்று
கொதிப்பதில் என்ன
கொள்கை இருக்கிறது ?

கைப்பொருளை இழந்து
மெய்ப் பொருளைக்
கண்டார்கள் அன்று !
இன்றோ-
மெய்ப் பொருளைச் சொல்லி
கைப் பொருளைச் சேர்க்கிறார்கள் !
இது என்ன இஸ்லாம்
எனக்குத் தெரியவில்லை !

பணம் சேர்க்கும்
பேர்களுக்குத்
தனியாகப் பள்ளிகள் !
பரம்பரை முஸ்லிம்களுக்கு
பழைய பள்ளிவாசல்கள் !

பிரிவினையை உண்டாக்கிப்
பிழைப்பை நடத்துகின்ற
தலைவர்களை இழுத்துவந்து
தலைசிரைத்துக் கழுதைமேல்
உட்கார வைத்து
உதைத்திடுவோம் வாருங்கள் !

Add Comment