கோவையில் கோலாகலமாக தொடங்கியது செம்மொழி மாநாடு

கோவை: தமிழறிஞர்கள், பல்துறை நிபுணர்கள், மொழியியல் அறிஞர்கள், பொதுமக்கள் என மக்கள் வெள்ளம் கோவையைச் சூழ இன்று காலை கோலாகலமாக தொடங்கியது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.

5 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான தமிழறிஞர்கள், பல்துறை நிபுணர்கள் பங்கேற்கின்றனர். கொடிசியா வளாகத்தில் இதற்காக பிரமாண்ட பந்தலும், மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று காலையிலேயே பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விட்டனர்.

முதல் நாள் நிகழ்ச்சி நிரல்

இன்று காலை 10. 30 மணிக்கு மாநாடு தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. டாக்டர் சீர்காழி சிவ.சிதம்பரம், நீராடும் கடலுடுத்த என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பாடினார்.

இதையடுத்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தொடங்கும் செம்மொழி மாநாட்டின் மைய நோக்குப் பாடல் ஒலிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார். குடியரசுத் தலைவர், முதல்வர், ஆளுநர், பேராசிரியர் சிவத்தம்பி, பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், பேராசிரியர் அஸ்கோ பாப்லோ உள்ளிட்டோருக்கு ஸ்டாலின் நினைவுப் பரிசினை வழங்கினார். ஸ்டாலினுக்கு மாநாட்டின் சிறப்பு அலுவலர் அலாவுதீன் சிறப்புப் பரிசினை வழங்கினார். அதேபோல தலைமைச் செயலாளர் ஸ்ரீபதிக்கும் அலாவுதீன் நினைவுப் பரிசினை வழங்கினார்.

இதையடுத்து அமெரிக்க அறிஞர் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் சிறப்புரை வழங்கினார்.

இனியவை நாற்பது பேரணி

மாலை 4 மணிக்கு இனியவை நாற்பது பேரணி பிரமாண்டமாக நடைபெறுகிறது.

தமிழகத்தின் செழுமை வாய்ந்த கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு ஆகியவற்றை சிற்பங்களாக சித்தரிக்கும் அலங்கார வாகனங்கள் இதில் கலந்து கொண்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.

வ.உ.சி. பூங்காவில் பேரணி தொடங்குகிறது. 9 கிலோமீட்டர் தூர பயணத்திற்குப் பின்னர் கொடிசியா மாநாட்டு வளாகத்தில் இது முடிவடையும். இந்தப் பேரணியைத் தலைவர்கள் பார்வையிடுவதற்கு வசதியாக வழியெங்கும் 7 இடங்களில் சிறப்பு மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. லட்சுமி மில் அருகே அமைக்கப்பட்டுள்ள மேடையிலிருந்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி ஆகியோர் பார்வையிடுகின்றனர்.

இத்துடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிவுக்கு வருகின்றன.

நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஆய்வரங்குகள், கவியரங்குள், கருத்தரங்குகள் உள்ளிட்டவை நடைபெறும். ஆய்வுரை நிகழ்த்தும் நிகழ்ச்சிகளுக்காக பல்வேறு தமிழ்ரப் புலவர்கள், அறிஞர்கள் buy Doxycycline online பெயர்களில் தனித் தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பலத்த பாதுகாப்பு

உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான தமிழறிஞர்கள் வருகை தந்துள்ளதால், கோவை முழுவதும் மாநாட்டுக்கான பாதுகாப்பு பலமாக போடப்பட்டுள்ளது.

11,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகர் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் சகிதம் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Add Comment