மாநில தேர்தல் ஆணையர் நடத்திய கூட்டத்திற்கு முன்பு விஜயகாந்த் உருவபொம்மை எரிப்பு

Buy cheap Bactrim alt=”” width=”281″ height=”229″ align=”middle” />

 தேமுதிக தலைவர் விஜயகாந்த், நேற்று முன்தினம் தூத்துக்குடி, மதுரை மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாத்தின் போது, பொதுத்தொகுதி, தனித் தொகுதி என்று தேர்தல் பிரித்து வைத்திருப்பது தவறு. அனைத்து தொகுதிகளையும், பொதுத்தொகுதியாக மாற்ற வேண்டும் என்று ஆவேசமாக பேசினார்.

விஜயகாந்த்தின் இந்த பேச்சை கண்டித்து, மதுரையில் தமிழ் புலிகள் அமைப்பினர், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு,விஜயகாந்த்தின் கொடும்பாவியை எரித்தனர்.

அப்போது, அந்த அலுவலகத்தின் உள்ளே தென் மாவட்டட போலீஸ் உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் உயர் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் விஜயகாந்த் உருவபொம்மை எரிக்கப்பட்டது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ஈடுபட்ட தமிழ் புலிகள் அமைப்பைச் சேர்ந்த மெய்யப்பன் தலைமையில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஏற்கனவே பரமக்குடி சம்பவத்தில் விசாரணை கமிஷன் தேவையில்லை என தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் சட்டமன்றத்தில் கூறினார். தொடர்ந்து தலித் விரோத போக்கை தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த்தும், அவரது கட்சியினரும் கடைப்பிடித்து வருவதாக கோஷங்களை எழுப்பி கைது செய்யப்பட்ட 5 பேரும் குற்றம் சாட்டினர்.

Add Comment