அதிகாரிகள் இடையே தகராறு தொழிலாளர் அலுவலகத்துக்கு 2 பூட்டு

நாகர்கோவில் : குமரி மாவட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே தொழிலாளர் நல அலுவலகம்(சமூக பாதுகாப்பு திட்டம்) செயல்படுகிறது. தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் வழங்கப்படும் உதவித்தொகை உள்ளிட்ட பணிகள் இதன் கீழ் நடந்து வருகிறது. தொழிலாளர் நல அலுவலர் பொறுப்பில் தோட்ட நிறுவனங்களின் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி இருந்து வந்தார். இந்நிலையில் Buy Cialis தொழிலாளர் துணை ஆய்வாளரான(தக்கலை) நெல்லையப்பன் என்பவரை, தொழிலாளர் நல அலுவலர் பொறுப்புக்கு நியமனம் செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கடந்த 4ம் தேதி நெல்லையப்பன் தொழிலாளர் நல அலுவலகத்துக்கு பொறுப்பேற்க சென்றார். அவரை பொறுப்பேற்க விடாமல் தமிழ்ச்செல்வி மற்றும் அவரது கணவர் ஆகியோர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நெல்லையப்பன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் உயர் அதிகாரி உத்தரவுபடி தொழிலாளர் நல அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் நேசமணிநகர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், தமிழ்ச்செல்வி மற்றும் அவரது கணவர் ஆகியோர் தன்னை பொறுப்பேற்க விடாமல் தடுத்து தகாத வார்த்தை பேசி அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி இருந்தார். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுடலைமணி விசாரணை நடத்தி தமிழ்ச்செல்வி மற்றும் அவரது கணவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே இப்பிரச்னை காரணமாக தொழிலாளர் நல அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு 2 பூட்டுகள் போட்டு பூட்டப்பட்டுள்ளது. இன்று காலை அலுவலகத்தை திறக்கும் போது  பிரச்னை எழலாம் என்று தெரிகிறது.

Add Comment