சவுதி அரேபியாவில் அல்-சாகீர் நகரில் அண்ணன்- தம்பி சுட்டுக்கொலை

உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரை சேர்ந்தவர் அகமது யாசின் (46). இவரது தம்பி முகமது ஷக்கீர் அகமது. இவர்கள் சவுதி அரேபியாவில் செயல் அல்-சாகீர் நகரில் உள்ள இரும்பு பொருட்கள் தயாரிக்கும் ஒரு ஓர்க்ஷாப்பில் வேலை பார்த்து வந்தனர்.
ஓட்டல் அதிபர் ஒருவர் இவர்கள் வேலை பார்த்த ஓர்க்ஷாப்பில் இரும்பு ஜன்னல்கள் மற்றும் கதவுகள் தயாரிக்க ஆர்டர் கொடுத்திருந்தார். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் அவற்றை செய்து தரவில்லை. இது குறித்து ஓட்டல் அதிபருக்கும், அகமது யாசினுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டல் அதிபர் தனது காரில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்து அகமது யாசினையும், Levitra No Prescription அவரது தம்பி முகம்மது ஷக்கீர் அகமதுவையும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.
அதில் இவர்கள் இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். அப்போது இவர்களுடன் இருந்த மற்றொரு தம்பி காயமின்றி தப்பினார். இந்த தகவலை சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர் எஸ்.டி. மூர்த்தி ஜெட்டாவில் இருந்து தெரிவித்துள்ளார். துப்பாக்கியால் சுட்ட ஓட்டல் அதிபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Add Comment