வாழ்க்கை என்னும் நந்தவனத்தில்…

வாழ்க்கை என்னும் நந்தவனத்தில்
வாசமும் வணணமும் மாறாத
அழகிய மலராய்…
அந்த நினைவுகள்…

பள்ளிக்கூடம் முடிந்ததும்
பாக்கட்டை வைத்து விட்டு
தெருவில் ஓடி வந்து..
அவ்வாபெந்தும் ஆவியமும்
ஆடியது ஒரு காலம்..

மீலாடி நபி கொண்டாட்டத்தில்
இரவெல்லாம் கண் விழுத்து
கலர் கலராய் கொடி ஒட்டி
தெருவெல்லாம் கட்டியதும்..
வாரம் ஒன்று போனபின்னே
கட்டிய கொடிகளை
கம்பால் அடித்து வீட்டினுள்ளே
பதுக்கிவைத்ததும்…

Haj பெருநாளைக்கு
பத்து நாள் மீதமிருக்க
புதிதாய் வாங்கிய
ஆட்டுக்குட்டியை
அடக்குளத்தில் மேயவிட்டு
ஆனந்தமாய் பார்த்து மகிழ்ந்ததும்..

வெளிநாட்டிலிருந்து
மாமா வந்தவுடன்
பெட்டி உடைக்கும் ஆவலில்
பெத்தாப்பூட்டிலே
படுத்து தூங்கியதும்….

online pharmacy without prescription style=”text-align: justify;”>வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து
அவசரகதியில் சாப்பிட்டுவிட்டு
மங்களசுந்தரி,மனோகிரி நோக்கி
நடைப்பயணம் போனதும்….

தெருவில் கட்டம்போட்டு
பெண்கள் பாண்டி ஆட
கண்ணைமூடி கட்டம் தாண்டுவதை
பிரமிப்பாய் கண்டு மகிழ்ந்ததும்…

இரவு சாப்பாடு மடிந்து
தூங்கும் முன்பு
தாத்தாவின் மடியில்
தலைசாய்த்து படுத்து
கதைகளில் மெல்ல
கரைந்துபோன நாட்கள்…..

என எத்தனையோ மலர்கள்
இதயத்தில் இன்னும்
மனம்வீசிக்கொண்டே
இருக்கின்றன….

Add Comment