பியானி-டாடா கூட்டணியின் புதிய மொபைல் சேவை ‘டி24’ ஆரம்பம்

மும்பை: கிஷோர் பியானியின் ஃப்யூச்சர் குரூப்பும் டாடா டெலிசர்வீசும் சேர்ந்து டி24 என்ற புது மொபைல் சேவையை தொடங்கியுள்ளனர்.

இந்த சேவைக்கான சிம் கார்டுகள் ஆந்திராவில் தொடங்கி 75 நகரங்களிலும், 65 கிராமங்களிலும் உள்ள ஃப்யூச்சர் குரூப்ஸின் சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கும்.

ஃப்யூச்சர் குரூப்ஸின் சில்லறை விற்பனை கடைகளான பான்டலூன்ஸ், online pharmacy without prescription பிக் பஜார், சென்ட்ரல் ஆகிய இடங்களில் கிடைக்கும். அந்தந்த கடைகளில் வாங்குவதைப் பொறுத்து இலவச டாக் டைம் அமையும்.

உதாரணமாக, பான்டலூன்ஸில் ரூ. 2,501 க்கு இந்த சேவையை வாங்கும் வாடிக்கையாளருக்கு 50 நிமிடங்கள் இலவச டாக் டைம் கிடைக்கும். இது போன்று, பிக் பஜாரில் ரூ. 1,501 க்கு வாங்கும் வாடிக்கையாளருக்கு 90 நிமிடங்கள் இலவச டாக் டைம் கிடைக்கும்.

டாடா டெலிசர்வீசஸ் ஜி.எஸ்.எம் மற்றும் சி.டி.எம்.ஏ சேவைகளை வழங்குகிறது. இதன் ஜி.எஸ்.எம் சேவையின் பங்குதாரர் ஜப்பானின் டோகோமோ நிறுவனம். வர்ஜின் மொபைல் தனது சி.டி.எம்.ஏ சேவையை டாடா டெலிசர்வீசஸ் கூட்டணியில் தான் தொடங்கியது.

டாடா டெலிசர்வீசஸ் தனது வாடிக்கையாளர் வட்டத்தை இந்த கூட்டணியின் மூலம் பெருக்கவுள்ளது. தொலைத்தொடர்பில் தொடங்கி பெட்ரோல் மற்றும் மின்சாரத் துறைகளிலும் நுழைய இருப்பதாக பியானி தெரிவித்தார்.

Add Comment