மனைவியை கொன்று விட்டு ஓப்பாரி வைத்த கணவன் கைது

திருநெல்வேலி: மனைவியை கழுத்தை Buy cheap Viagra நெறித்து கொன்றுவிட்டு பக்கத்தில் உட்கார்ந்து ஒப்பாரி வைத்து அழுத கணவன் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்துள்ள அய்யாபுரத்தை சேர்ந்தவர் கனகராஜ்(27). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெயசக்தி(23). இவர்களுக்கு மூன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ள ஜெயசக்தி, தற்போது அருகில் உள்ள கல்லூரியில் பி.எட்.,படித்துவந்தார்.

இவருக்கும் கல்லூரியில் ஒன்றாக படிக்கும் ஒரு மாணவருக்கும் தொடர்பு இருப்பதாக கனகராஜ் சந்தேகப்பட்டார். எனவே மனைவியை கண்டித்தார். அவர் கேட்கவில்லை. இதனால் ஆத்திரமுற்ற கனகராஜ், நேற்று மதியம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மனைவி ஜெயசக்தியை நைலான் கயிற்றால் சுற்றி நெருக்கி கொலை செய்தார். அங்கிருந்து தப்பித்து சென்றால் மாட்டிக்கொள்வோம் என நினைத்த கனகராஜ், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகம் ஆடினார். உறவினர்களை அழைத்தார். மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறினார். உறவினர்கள் அழுதபோது கனகராஜூம் மனைவி உடல் அருகே உட்கார்ந்து ஒப்பாரி வைத்து அழுதார். தகவல் அறிந்து போலீசார் வந்தனர். தூக்கில் தொங்கிய பெண்ணை இறக்கியது யார், அந்த கயிற்றை எங்கே என்றெல்லாம் கேள்விகள் கேட்டனர். கழுத்தை நெறித்த நைலான் கயிற்றை ஒரு பிளாஸ்டிக் கவரில் இருந்து எடுத்து கொடுத்தார் கனகராஜ். பின்னர் போலீசாரிடம், நடத்தையில் சந்தேகத்தால் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் கனகராஜை கைது செய்தனர்.

Add Comment