கருணாநிதி அறிக்கை தமிழ்நாட்டில் மின்வெட்டு நீடிக்கும் அபாயம்

சென்னை : அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் மின்வெட்டு நீண்டு கொண்டே போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி கேள்வி பதில் அறிக்கை: நிலப் பறிப்பு அரசாணைக்கு எதிரான வழக்கு திமுக மனு என்று செய்தி வெளிவந்திருக்கிறதே? நிலத் தகராறு பற்றிய வழக்குகள் என்றால் அவைகளின் மீது சிவில் வழக்குகளைத் தான் தொடுக்க வேண்டும். ஆனால் இந்த ஆட்சியில் அந்த வழக்குகளை எல்லாம் கிரிமினல் வழக்குகளாக மாற்றி பதிவு செய்கிறார்கள். இதை எல்லாம் சுட்டிக் காட்டிடத் தான் அரசின் ஆணையை எதிர்த்து வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

நிலப் பறிப்பு அரசாணைக்கு எதிராக 3 வழக்குகள் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன. அதில் ஒரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட போதிலும் மற்ற 2 வழக்குகளும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த வழக்கு இன்னும் முடிவடையவில்லை. அதிமுக அரசு பதவிக்கு வந்த 6 மாதங்களுக்குள் ஒரே ஆண்டில் ^4000 கோடி வரி கூடுதலாக வசூலிக்க திட்டமிட்டிருப்பது பற்றி?

பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு சில நாட்களிலேயே ஒரு சில பொருட்களுக்கு 4 சதவீதம் என்று ஏற்கனவே இருந்த வரியை 5 சதவீதமாகவும் ஏற்கனவே 12 சதவீதமாக இருந்த பொருட்களின் மீதான வரியை  14 சதவீதமாகவும் 20 சதவீதமாகவும் உயர்த்தினார்கள். ஆட்சிக்கு வந்த 3 மாத காலத்திற்குள்ளாகவே ஜெயலலிதா ஆட்சியினர் நிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே சுமார் ^4000 கோடி அளவுக்கு வரிகளை சுமத்தியிருக்கிறார்கள்.

ஏற்கெனவே திமுக ஆட்சியில் டிடிஎச் சேவைக்கும், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கும் தமிழகத்தில் வரி கிடையாது. ஆனால் இப்போது டிடிஎச் சேவைக்கு 30 சதவீதமும், ஐபிஎல்க்கு 25 சதவீதமும் வரியை விதித்தார். இதன் மூலம் ^120 கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவதாக வரி செலுத்த மறுக்கும் வணிக நிறுவங்களின் சொத்துகளை வணி வரித்துறையினர் ஜப்தி செய்வது வழக்கம். ஆனால் அவற்றை ஏலம்  விடுவது தான் பெரிய சிக்கல்.  2010ம் ஆண்டு வணி வரித்துறையினரால் ஜப்தி செய்யப்பட்ட வழக்குகள் 901. அந்தப் பொருட்களின் மதிப்பு ^1200 கோடி. தற்போது அந்த பொருட்களை ஏலம் விடுவதற்கு அதிமுக அரசு அனுமதி கொடுத்து அதுபற்றி விளம்பரம் வெளியிடுவதற்காகவே ^1 கோடியே 13 லட்சம் ஒதுக்கி இருக்கிறார்கள். இந்த முறையில் அரசுக்கு குறைந்தபட்சம் ^800 கோடி கூடுதல் வருவாய்  வரும் என்று எதிர்பார்க்கிறார்களாம். ஒட்டுமொத்தமாக ஆறுமாத கால ஆட்சியில் ^4000 கோடி வருவாய் ஈட்டுவதற்கான ஏற்பாடுகளை அதிமுக அரசு செய்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா அன்றாடம் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஏதாவது ஒரு கட்டிடத்தை திறந்து வைக்கிறாரே. அப்போது அவர் என்ன நினைத்துக் கொள்வார்?
திமுக ஆட்சியிலேதான் எத்தனை கட்டிடங்களை கட்டியிருக்கிறார்கள்? எத்தனை பாலங்களை கட்டியிருக்கிறார்கள்? அவர்கள் கஷ்டப்பட்டு கட்டியதை எல்லாம் நாம் இப்போது சுகவாசியாக திறந்து வைக்கிறோமே? ஆனால் அவர்கள் எதுவும் செய்யவில்லை என்று பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றிய நம்ப வைத்து வெற்றி பெற்றுவிட்டோமே? இப்படித்தான் நினைத்துக் கொள்வார்.

^10 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ததாக திருவள்ளூரில் தேமுதிக ஒன்றியச் செயலாளர் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்களே?
திமுகவினர் மீது இதே குற்றச்சாட்களை கூறிய போது தேமுதிக தலைவர் அதையெல்லாம் வரவேற்றுப் பாராட்டினார். தற்போது உள்ளாட்சி தேர்தல்களில் அவர் உடன்பாடு கொள்ளவில்லை என்றதும், அவருடைய கட்சியை சேர்ந்தவர்கள் மீதும் பொய் வழக்கு போடும் செயல் தொடங்கிவிட்டது. அதிமுகவை பொறுத்தவரை, அவர்களோடு ஒத்துப் போனால் உறவு. எதிர்த்தால் வழக்கு.

தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தல் குறைந்துவிட்டதாக அதிமுகவின் உணவு அமைச்சர் சொல்லியிருக்கிறாரே? அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மட்டும் அரிசி கடத்தல் தொடர்பாக சுமார் 4500  வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், 2000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்த அமைச்சரே சொல்லியிருக்கிறார்.
மின் பற்றாக்குறை, கையாலாகாத அரசு என்றெல்லாம் முன்பு அன்றாடம் அறிக்கை விட்ட ஜெயலலிதாவின் ஆட்சியின் நிலை என்ன?

தமிழக மின்துறைக்கு சோதனை மேல் சோதனை என்றும், மின் கருவி ஏற்றி வந்த லாரி விபத்துக்கு உள்ளாகி விட்டது என்றும், இதனால் சென்னைக்கு தொழில் நுட்பக்கருவிகளை கொண்டு வர மேலும் 6 மாதங்கள் தாமதமாகும் என்றும், தமிழக மின்துறை Buy Viagra திட்டமிட்டதைவிட, கூடுதலாக 6 மாதங்கள் மின்பற்றாக்குறையை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும்,

10 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு இருக்கிறது என்றும், போதிய அளவு நிலக்கரி இல்லாததால் மின் நிலையங்களின் அனைத்து யூனிட்டுகளையும் இயக்க முடியவில்லை என்றும், அன்றாடம் அடுத்தடுத்து இந்த ஆட்சியில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றனவே தவிர, மின்சார வெட்டு நீண்டு கொண்டேதான் உள்ளது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

அமைச்சர் மிரட்டல் கருணாநிதி கண்டனம்

* தேர்தல் அதிகாரிக்கு அமைச்சர் ஒருவர் மிரட்டல் விடுத்த செய்தி ஒரு நாளிதழில் வெளிவந்துள்ளதே?
ஆமாம். வேலூரில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள2ன் பட்டியலை அதிகாரி வெளியிட்ட போது தேர்தல் விதிமுறைப்படி, அகர வரிசைப்படி பெயர்களை வெளியிட்டுள்ளார். அவ்வாறு வெளியிடும்போது திமுக வேட்பாளரின் பெயர் இராஜேஸ்வரி என்பதால், முதல் பெயராக அமைந்துவிட்டது. ஆனால அதிமுக அமைச்சர் ஒருவர்  அதிமுக வேட்பாளரின் பெயரான கார்த்தியாயனி என்று பெயரை முதல் பெயராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். தேர்தல் அதிகாரி தேர்தல் விதிகளை கூறி அகர வரிசையில் தான் போட்டியிடும் வேட்பாளர்களை பட்டியிலிட முடியும் என்று தெரிவிக்க, தொலைபேசியிலேயே அமைச்சருக்கும், தேர்தல் அதிகாரிக்கும் விவாதம் நடந்துள்ளது. அமைச்சரின் உதவியாளர் ஒருவர் நேரில் சென்று அதிகாரியிடம் மிரட்டியிருக்கிறார்.  அதிமுக ஆட்சியில் தேர்தல் அதிகாரிகள் எந்த அளவுக்கு அமைச்சர்களாலும், அவர்களின் உதவியாளர்களாலும் மிரட்டப்படுகிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாகும்.

Add Comment