கடை நடத்துவதில் மோதல் : போலீஸ் தடியடி: 5 பேர் காயம்

திருநெல்வேலி: நெல்லையில் கடையை சொந்தம் கொண்டாடி இருதரப்பு மோதலால் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
திருநெல்வேலி ஜங்ஷன், ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள த.மு.,கட்டடத்தில் ஜெயினபு பீவி என்பவர் பல ஆண்டுகளாக புரோட்டா கடை நடத்திவந்தார். மீனாட்சிபுரத்தை சேர்ந்த போஸ் என்பவர் அதற்கு அடுத்ததாக உள்ள கடையை விலைக்கு வாங்கினார். புரோட்டா கடைக்குள் 4 அடி தூரம் தமக்கு உரிமை இருப்பதாக கூறினார். இதுதொடர்பாக போஸ் தொடர்ந்த வழக்கில் புரோட்டா கடைக்கு கோர்ட் தடை விதித்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஜெயினபு பீவி தரப்பில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து மீண்டும் கடையை நடத்த அனுமதி பெற்றனர். இந்த தீர்ப்பு கிடைத்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் அந்த கடையை நடத்த போலீஸ் அனுமதி கோரினர். ஆனால் போலீசார் கண்டுகொள்ளாததால் கடையை நடத்த முடியவில்லை. எனவே நேற்று ஜெயினபுபீவி, அவரது மகன் அப்துல் ஹமீது ஆகியோர் ஒரு அமைப்பை சேர்ந்த சுமார் 20 இளைஞர்களுடன் அங்கு வந்தனர். கடையின் மேல் பகுதியில் உடைந்திருந்த ஆஸ்பெஸ்டாஸ் தரகத்தை சரி செய்துகொண்டிருந்தனர். அப்போது போஸ் தரப்பினர் சுமார் 20 பேருடன் அங்கு கூடினர்.

இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் ஏற்கனவே போலீஸ் துணைகமிஷனர் Lasix No Prescription அவினாஷ்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இரு தரப்பினரும் தங்கள் ஆவணங்களுடன் ஜங்ஷன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு துணை கமிஷனர் கூறினார். அப்துல்ஹமீது தரப்பு வக்கீல், தங்களிடம் கோர்ட் உத்தரவு இருப்பதாலும், ஆவணங்கள் இருப்பதாலும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சமாதானம் பேச வரமுடியாது என கூறினார். தொடர்ந்து ஆஸ்பெஸ்டாஸ் தகரத்தை சரி செய்த நபர்கள் மீது எதிர்தரப்பை சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். இருதரப்பினரும் மோதலில் இறங்கியதால் போலீசார் அவர்களை கலைக்க தடியடி நடத்தினர். எப்போதும் பொதுமக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் ஜங்ஷன் பகுதியில் போலீசார் தடியடி நடத்தியதில் கடை உரிமையாளர் அப்துல்ஹமீது, பக்கீர் மைதீன்(28), காஜாமுகம்மது(35), வேடிக்கை பார்த்த பத்தமடை நாராயணன் ஐயர், ஆயுதப்படை போலீஸ்காரர் கதிரேசன் ஆகியோர் காயமுற்றனர். இருதரப்பையும் சேர்ந்த தலா பத்து பேர் வீதம் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Add Comment