கருணாநிதியின் உள்ளங்கை ரேகை’யான லீக்.

திமுகவின் சிறுபான்மைப் பிரிவு என்று பலராலும் விமர்சிக்கப்படும் முஸ்லிம்லீக் இந்த முறை கொஞ்சம் சொரணை வந்து உள்ளாட்சியில் தனித்துப் போட்டி என்று அறிவித்துள்ளது. இதற்கு காரணம் நகமும் சதையுமாக இருந்த காங்கிரஸை உள்ளாட்சியில் கழற்றி விட்ட கருணாநிதி, திமுக தனித்துப் போட்டி என அறிவித்து விட்டதால், உள்ளாட்சியில் திமுகவிடம் ஒதுக்கீடு கேட்க இயலாது என்பதுதான் முஸ்லிம்லீக் தனித்து போட்டியிடும் நிர்பந்தத்திற்கு தள்ளியது. ஆனாலும் கருணாநிதியின் தயவு என்றைக்கும் தேவை என்பதால் திருச்சி இடைத்தேர்தலில் ஆதரவு என்று அறிவித்துக் கொண்டது.

இந்நிலையில், எந்தவித நிபந்தனையுமின்றி கருணாநிதியிடம் சரணடையை இதோ! இன்னொரு லீக் தயார். தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை அண்ணா Buy Lasix அறிவாலயத்தில் சந்தித்து பேசிய தேசிய லீக் கட்சி தலைவர் எம்.பஷீர் அகமது,
”வெள்ளம் வந்தாலும், என்றும் தேசிய லீக் உங்கள் உள்ளங்கை ரேகை போல என்றும் வெளியேராமல், தங்களோடு இருக்க வேண்டும் என்ற உறுதி மொழியேற்று 2004, 2009 நாடாளுமன்ற தேர்தலிலும் 2011 சட்டப் பேரவை தேர்தலிலும் எந்தவிதமான முன்நிபந்தனைகளும் இன்றி தி.மு.க.வுக்கு தேசிய லீக் ஆதரவு அளித்து வருகிறது.
அதனைப் போலவே வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் போட்டியிடும் சில தொகுதிகள் தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் திருச்சி மேற்கு சட்டமன்ற இடைத் தேர்தலிலும் முழுமனதான ஆதரவை வழங்க இருப்பதாக கூறியுள்ளார்.

லீக்குகள் என்னதான் கருணாநிதியின் உள்ளங்கை ரேகையாக இருக்க விரும்பினாலும், லீக்குகளை தனது இடது கை ரேகையாகத்தான் கருணாநிதி கருதுவாரே தவிர, வலது கை ரேகையாக கருத மாட்டார் என்பதை என்றைக்குத்தான் இவர்கள் புரிந்து கொள்ளப் போகிறார்களோ?

Add Comment