கஅபா அழைக்கிறது ! (பீ. எம். கமால், கடையநல்லூர்)

கஅபா அழைக்கிறது !
(பீ. எம். கமால், கடையநல்லூர்)

தோற்றுப் போனவர்களே !
வெற்றி பெற வாருங்கள் !
ஆற்றுப் படுத்துதற்கு
அழைக்கின்றேன் வாருங்கள் !

கண்ணீரில் ஆன்மாவைக்
கழுவிச் சலவைசெய்ய
பாவதாரிகளே! என்
படித்துறைக்கு வாருங்கள் !

மோகத்தில் மூச்சிறைக்க
முத்தமிட்டுக் கருத்துவிட்ட
சுண்டுகளின் அர்த்தத்தை
கண்டுகொள்ள வாருங்கள் !

என்
முந்தானையில் நான்
முடிந்துவைத் திருக்கின்ற
கருப்பமுதக் கல்சுவைக்க
கருத்துடனே வாருங்கள் !

“குமரு கரையேரட்டும்
கொண்டகடன் தீரட்டும் ”
என்றநிலை மறந்து விட்டு
என்னிடத்தில் வாருங்கள் !

ஆயுளுக்கும் சிரமங்கள்
ஆழியலைக் கைபோல
அலைக்கழிக்கும்; மறந்துவிட்டு
ஆசையுடன் வாருங்கள் !

மையித்து உடையணிந்து
மறுமைக்கு நடைபயின்று
பொய் அற்றுப் போவதற்கு
புறப்பட்டு வாருங்கள் !

நாடுமொழி மறந்து இறை
நாடுகின்ற மனமோடு
பாடுகின்ற “தல்பியாப்”
பண்ணிசைக்க வாருங்கள் !

எதிர்காலம் என்பதெல்லாம்
எவரிடத்தும் இல்லையதால்
புதிர்க் குமிழி உடையுமுன்னே
புறப்பட்டு வாருங்கள் !

ஆன்மாவின் புல்வெளியில்
அலைகின்ற மிருகத்தை
அறுத்துப் பலியிடுவதற்கு
அழைக்கின்றேன் வாருங்கள் !

ஆன்மாவின் buy Levitra online முகவரியை
அகிலத்தில் தொலைத்தோரே !
அடையாளம் கண்டுகொள்ள
ஆர்வமுடன் வாருங்கள் !

சாத்தானின் வலைவிரிப்பில்
“ஆமீன்கள்” துள்ளிவிழ
வெறுங்கையோ டிருப்போரே !
விரைந்திஙகே வாருங்கள் !

புவியீர்ப்பு மையம்
புதைந்திருக்கும் இடம்நோக்கி
புடம்போட நினைப்போரே !
புறப்பட்டு வாருங்கள் !

திசைகள் சங்கமிக்கும்
திருத்தலத்தை நோக்கி இனி
திருந்திட நினைப்போரே!
திரளாக வாருங்கள் !

பச்சைக் குழந்தைகளாய்
பாரினில் பிறப்பெடுக்க
இச்சை கொண்டோரே
என்னிடத்தில் வாருங்கள் !

தொழுதறியேன் ; நடைமுறையின்
பழுதறியேன் என்னாமல்
முழுமனது வைத்தென்னை
முத்தமிட வாருங்கள் !

காணிக்கைத் தொழுகை என்
கண்முன்னே தொழுதுவிட்டால்
பேணிக்கை வந்துவிடும்
பிரியமுடன் வாருங்கள் !

வட்டிகளை விட்டுவிட்டு
வரதட்சணை மலத்தைக்
கழுவித் தூய்மையாகி
கசடறவே வாருங்கள் !

ஏக இறை ஒன்றென்றும்
இறைத் தூதர் நபியென்றும்
மோகமுடன் முன்மொழிந்து
தாகமுடன் வாருங்கள் !

உங்களைச் சுற்றிவரும்
ஒருகோடித் துன்பங்கள்
என்னைச் சுற்றிவந்தால்
எங்கயோ ஓடிவிடும் !

நோயரக்கன் கைகளிலே
நொம்பலப் பட்டு உடல்
மரணிக்கும் முன்பே
மரணிக்க வாருங்கள் !

Add Comment