ஜூலை 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு 16ம் தேதிக்குள் பெயர் சேர்த்தல், நீக்கம் வேண்டுகோள்

திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் ஜூலை 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. பெயர் நீக்கம், சேர்த்தல் போன்ற பணிகளை ஜூலை 16ம் தேதிக்குள் படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும் என கலெக்டர் ஜெயராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தம் குறித்து அனைத்துக் கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயராமன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ரமணசரஸ்வதி, மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், “நெல்லை மாவட்டத்தில் ஜூலை 1ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட மையங்களான மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், தபால் நிலையங்கள் ஆகிய இடங்களில் பொதுமக்கள் பார்வைக்காக விளம்பர பலகையில் ஒட்டி வைக்கப்படும். Doxycycline No Prescription வாக்காளர் தங்களது பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான படிவங்களை முழுமையாக பூர்த்தி செய்து ஜூலை 16ம் தேதிக்குள் படிவங்களை அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் சமர்பிக்கவேண்டும். அரசு விடுமுறை நாட்களான ஜூலை 10, 11ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். தற்சமயம் திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் அதற்கான குறுந்தகடுகள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் போன்ற பணிகள் நிறைவு பெற்றதும் செப்.15ம் தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படும். பூர்த்தி செய்யப்பட்ட வாக்காளர் படிவங்களை தொடர்புடைய குடும்பத்தின் உறுப்பினர் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் அளிக்கவேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் தனி நபர்களிடமிருந்து மொத்தமாக படிவங்கள் பெறப்படமாட்டது. பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் படிவங்களை முழுமையாக பூர்த்தி செய்வதில் தனிக்கவனம் செலுத்தவேண்டும். இவ்வாறு கலெக்டர் ஜெயராமன் பேசினார்.

கூட்டத்தில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் வீரராகவராவ், நெல்லை ஆர்.டி.ஓ., தமிழ்செல்வி, பி.ஆர்.ஓ., ரவீந்திரன், பஞ்., உதவி இயக்குனர் திரவியம், காங்., மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ பெருமாள், அதிமுக துணைச் செயலாளர் பழனி, மதிமுக மாவட்ட செயலாளர் நிஜாம் மற்றும் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Add Comment