திண்டுக்கல்: வைகோ மீது வழக்குப்பதிவு

திண்டுக்கல்லில் தேர்தல் பிரசாரத்தின் போது, தேர்தல் விதியை மீறியதாக ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் வருகிற 17 மற்றும் 19-ந்தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ம.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொது செயலாளர் வைகோ மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

 அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நேற்று காலை முதல் இரவு வரை பிரசாரம் மேற்கொண்டார்.

திண்டுக்கல் நகரசபை தலைவர் பதவிக்கு போட்டியிடும் என்.செல்வராகவன் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
திண்டுக்கல்லில் அவர் தேர்தல் பிரசாரம் செய்தபோது தேர்தல் விதியை மீறி அதிக வாகனங்களை பயன்படுத்தியதாக திண்டுக்கல் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ராஜசேகரன், போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, நகரசபை தலைவர் பதவி வேட்பாளர் என்.செல்வராகவன், நகர செயலாளர் பரசுராமன் ஆகியோர் no prescription online pharmacy மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் திண்டுக்கல் பழனிரோட்டில் தேர்தல் விதியை மீறியதாக, வைகோ உள்பட 3 பேர் மீது திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Add Comment