தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் இந்தியர் மீது நடத்தும் தாக்குதலாகும்

சென்னை: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை இந்தியர் மீது நடத்தும் தாக்குதலாக மத்திய அரசு கருத வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.
வெளியுறவு துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் நேற்று சென்னை வந்தார். தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து பேசினார். பின்னர் அவர் இலங்கை சென்றார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த ஜூன் 2ம் தேதி இலங்கை கடற்படை 4 தமிழக மீனவர்களை பிடித்து சென்றது. ஜூன் 20ல் 23 மீனவர்களையும் 5 எந்திர படகுகளையும் பிடித்து சென்றனர். ஜூலை 4ல் 14 மீனவர்களையும் படகையும் பிடித்து சென்றனர். மே  மாதத்தில் இருந்து இதுபோல் 16 சம்பவங்கள் நடந்துள்ளன. பாகிஸ்தான், சீன ராணுவம் எல்லையில் உள்ள நம் மக்களை தாக்குவது போன்றது இது.  இந்த தாக்குதலை தேசிய பிரச்னையாக அணுக வேண்டும்.
ராமநாதபுரம், நாகப்பட்டினம் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும்போது அவர்களின் மீன்களை இலங்கை மீனவர்கள் பறிக்கின்றனர். இதற்கு இலங்கை கடற்படை உடந்தையாக உள்ளது. எல்லா அத்துமீறல்களும் இலங்கை கடற்படைக்கு தெரிந்தே நடக்கிறது. மீனவர்கள் என்ற போர்வையில் இலங்கை கடற்படையினர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக உணருகிறோம். அதாவது, தமிழக மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்து மீன்களை எடுத்துச் செல்ல buy Bactrim online வரும் இலங்கை மீனவர்கள் சிறிய ரக படகுகளிலேயே வருகின்றனர். அந்த படகுகள் வெகுதூரத்தில் செல்லக்கூடிய அளவில் டீசல் கொள்ளளவு உள்ள படகுகள் அல்ல என்பது தெளிவாகிறது.
எனவே இந்த பிரச்னைகளை இலங்கை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல் காலகாலமாக கச்சத்தீவை சுற்றி மீன்பிடித்து வரும் இந்திய மீனவர்களுக்கு அதே உரிமையை தர வேண்டும் என்று இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும். இலங்கை முகாம்களில் வாழும் தமிழ் மக்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார். இந்த சந்திப்பின்போது மத்திய வெளிவிவகாரத் துறை இணை செயலாளர் சிரிங்லா, வெளிவிவகாரத்துறையின் உயர் அதிகாரி சஞ்சீவ் சிங்கா, தமிழக தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி ஆகியோர் உடன் இருந்தனர்.

Add Comment