டாக்டர்களின் அலட்சியத்தால் சிசுவுடன் கர்ப்பிணி பெண் பலி : புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு

புளியங்குடி : புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்களின் அலட்சியத்தால் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் சிசுவுடன் பரிதாபமாக உயிரிழந்தார்.

புளியங்குடி புதுமனை 3ம் தெருவை சேர்ந்தவர் முகமதுஅலிஜின்னா. இவரது மகன் சுபகானி (28). இவருக்கு திருமணமாகி ஜமீலாபீவி (26) என்ற மனைவியும், ரியாஸ்கான் (3) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் 2வது பிரசவத்திற்காக நேற்று அதிகாலையில் ஜமீலாபீவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக காலை 6 மணிக்கு புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது பணியில் இருந்த செவிலியர் தாயும், சிசுவும் நன்றாக இருப்பதாகவும், இன்னும் சில நேரங்களில் குழந்தை பிறக்கும் எனவும் கூறியதாக தெரிகிறது. ஆனால் சில மணி நேரம் கழித்து பிரசவ வலி மேலும் அதிகமாகவே வேதனைப்பட்டுள்ளார். டாக்டர்கள் வராததால் செவிலியர்களால் பிரசவம் பார்க்க முடியவில்லை. எனினும் நர்சுகள் பிரசவம் பார்க்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த முயற்சி பலனளிக்காமல் ஜமீலாபீவி காலை 10 மணிக்கு பரிதாபமாக இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவரது உறவினர்களும், நண்பர்களும் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்ககோரி அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். பின்னர் தென்காசி ஆர்டிஓ மூர்த்தி, சுகாதார பணிகள் இணை இயக்குநர் உஷா ரிசபதாஸ், வாசு., எம்.எல்.ஏ., டாக்டர் சதன் திருமலைக்குமார், சிவகிரி தாசில்தார் ராஜாராம், புளியங்குடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தெய்வம் ஆகியோர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் இப்பிரச்சனை குறித்து கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கலெக்டரின் உத்தரவின்படி, மருத்துவக்குழு அமைத்து தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அதன் அறிக்கை கிடைத்த பின் தவறு செய்த டாக்டர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இறந்த ஜமீலாபீவியின் குடும்பத்திற்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது உறவினர்கள் உடலை பெற்றுக் கொண்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

இச்சம்பவம் குறித்து தமுமுக., மாவட்ட பொருளாளர் செய்யதுஅலி கூறுகையில், “”புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்கு சேர்த்தபோது இங்கு பணியில் டாக்டர்கள் யாரும் இல்லை. செவிலியர்கள் மூலம் டாக்டருக்கு தகவல் தெரிவித்த பின்னரும் டாக்டர்கள் வரவில்லை. இதனால் செவிலியர்களே பிரசவம் பார்க்க முயன்றுள்ளனர். உரிய Viagra online நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் ஜமீலாபீவி பரிதாபமாக உயிரிழந்தார். பணியில் கவனம் இல்லாமல் அஜாக்கிரதையாகவும், அலட்சியமாகவும் இருந்த செவிலியர்கள் மற்றும் டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் அவரது குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்” என்றார். புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் இருந்த கரும்பலகையில் பணியில் இருக்கும் டாக்டர்கள், செவிலியர்கள் விபரம் குறிப்பிடப்படாமல் இருந்தது.

Add Comment