கடையநல்லூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 14 -ஆவது வார்டு வேட்பாளர்

கடையநல்லூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 14 -ஆவது வார்டு வேட்பாளர்

கடையநல்லூர் நகராட்சிதேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுக வுடன் கூட்டணி அமைத்து 9 வார்டுகளில் போட்டியிடுகிறது .இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் 14 – ஆவது வார்டு வேட்பாளராக சமூக சேவகரும் கடையநல்லூர் நகரசெயலாளருமான கே.எம்.அப்துல் லத்தீப் நிற்கின்றார் .

அவர் அந்த வார்டின் நகர்மன்ற உறுப்பினர் ஆகாமலே அந்த வார்டுக்கும் ,கடையநல்லூர் நகரத்திற்கும் பல்வேறு நற்பணிகள் நடைபெறுவதற்கு முன்னின்றவர் .

அவர் சார்ந்த 14 -ஆவது வார்டில் மின்னழுத்தம் காரணமாக மின்தடை அடிக்கடி ஏற்பட்டது .அனைத்து மக்களின் சார்பில் , அந்த வார்டுக்கு தனி டிரான்ஸ்பார்மர் வேண்டும் என்று கோரிக்கை எழுந்த போது ,அதற்க்கு அந்த வார்டை சாராத சில நயவஞ்சகக் கூட்டம் ,அந்த வார்டை சார்ந்த ஒரு சில சுநலன் கொண்டவர்களை கையில் எடுத்துக்கொண்டு ,டிரான்ஸ் பார்மர் வருவதை தடுத்த நேரத்தில் , துணிவுடன் களம் கண்டு பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப டிரான்ஸ்பார்மரை கிடைக்கச்செய்து அனைவரின் பாராட்டை பெற்றவர் .

தெருக்குப்பைகள் ,கழிவுநீர் ஓடை சுத்தம் செய்யப் படாமல் இருந்த போது , பல்வேறு நேரங்களில் சளைக்காமல் தானாகவே நகராட்சிக்கு சென்று அதிகாரிகளை சந்தித்து துப்பரவு பணிகள் 14 -ஆவது வார்டில் நடைபெற முயற்சிகள் பல செய்தவர் .
மர்மக் காய்ச்சலால் கடையநல்லூரில் பலர் உயிரிழந்தபோது , அன்றைய சுகாதரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர் செல்வத்தை சந்தித்து கோரிக்கை வைத்து உடனடி நடவடிக்கைக்கு வழிகோலியவர் .

Buy Amoxil Online No Prescription justify;”>கடையநல்லூரில் எத்தனையோ ஏழை மாணவர்களின் கல்விக்கு வழி காட்டியவர் .

கடையநல்லூரில் ,ஒரு கலைக்கல்லூரி ஏற்படுத்த படவேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருபவர் .

கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட குறிப்பிட்ட 500 -க்கு மேற்பட்ட வீடுகளும் ,வணிகத்தலங்களும் பன்மடங்கு உயர்த்தப்பட்ட வரி உயர்வால் பாதிக்கப்பட்டபோது ,அந்த வரியை குறைப்பதற்கு ஒரு வருட காலம் மேற்கொள்ளபட்ட தொடர் போராட்டத்தில் யாருக்கும் அஞ்சாமல் , அல்லாவிற்கு மட்டுமே அஞ்சி முன்னின்று போராடியவர் .

இப்படி , கடையநல்லூர் நலனில் அக்கறைகொண்டுள்ள 14 -ஆவது வார்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேர்தலில் நிற்கும் வேட்பாளர் கே.எம்.அப்துல் லத்தீப் வெற்றி பெற்று அந்தவார்டுக்கும் ,கடையநல்லூர் நகர மக்களுக்கும் நற்பணி செய்வார் என்று கடையநல்லூர் நகர மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர் .

தகவல் : நல்லூர் நண்பன்

Add Comment