ஏழைகளின் வலி புரியவில்லையே…

பக்கத்து வீட்டு பார்வதி
பருவம் எய்தாளாம்
பள்ளிக்கூடத்திலிருந்து
பாதியிலே திரும்பி வந்தாளாம்..
பாவிமகள் பருவம் வந்து
பட்டனி வயற்றில்
புளியை கரைத்தாளே…

ஓராண்டுபோன பின்பு
ஊரேகேட்குமே – எப்போது
திருமணம் என்று
என்னபதில் சொல்லப்போகிறேனே
தெரியலியே இன்று….

புட்டியும் குட்டியுமாய் அலையும்
புருஷனும்…
சட்டியும் பெட்டியும் கழுவி
வயற்றை நிரப்பும் நானும்
எங்குபோவோம் பணத்திற்கு…

ஏழைகளின் வலி அந்த
காமாட்சிக்கும் புரியவில்லையே
ஏழைகளின் துயர்துடைக்க எந்த
ஆட்சியும் முன்வரவில்லையே…

Amoxil online justify;”>தினமும் நாற்பது ருபாய்
சம்பாதிக்கும் என்னையும்
பணக்காரன் என்கிறதே
இந்த ஆட்சி…

நாய்களுக்குகூட நல்வாழ்க்கை
இருக்கிறது மாளிகை வீட்டில்
நாய்களைவிட கேவலமாய் போச்சே
எங்களிள் வாழ்க்கை ரோட்டில்…

Add Comment