அரசு வழங்கும் நலத்திட்டத்தில் உண்மையான பயானாளிகள் பயன்பெறாமல் இருந்துவிட கூடாது : மாவட்ட வருவாய் அலுவலர்

கடையநல்லூர் : “அரசு வழங்கும் நலத்திட்டத்தில் உண்மையான பயனாளிகள் பயன் பெறாமல் இருந்துவிட கூடாது’ என மாவட்ட வருவாய் அலுவலர் ரமணசரஸ்வதி கேட்டுக் கொண்டார்.

காசிதர்மம், இடைகால், நயினாரகம் பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கான மனுநீதிநாள் முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் ரமணசரஸ்வதி தலைமையில் காசிதர்மத்தில் நடந்தது. பஞ்.,தலைவர் ஆனைக்குட்டி பாண்டியன், முன்னாள் யூனியன் தலைவர் அய்யாத்துரை முன்னிலை வகித்தனர். முகாமில் 439 மனுக்களில் 220 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 219 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

மனுநீதிநாள் முகாமிற்கு தலைமை வகித்து மாவட்ட வருவாய் அலுவலர் ரமணசரஸ்வதி பேசுகையில், “”காசிதர்மத்தில் தென்காசி ஆர்டிஓ வாக பணியாற்றியபோது மனுநீதிநாள் முகாமில் கலந்து கொண்டுள்ளேன். அப்போது கோரப்பட்ட மனுக்களில் இன்றும் பெருமளவில் அதே பொருள் குறித்து கேட்கப்பட்டுள்ளது. நடக்க முடியாத பணிகள் என்பதால் தான் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனை திரும்ப திரும்ப கொடுத்தால் எந்த பலனும் கிடையாது. இங்கு வரப்பட்ட மனுக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் பயனாளிகள் பட்டியல் இடம்பெறவும், முதியோர் உதவித் தொகை கேட்டும், ஊனமுற்றோருக்கு உதவி கேட்டும் மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது.

வறுமைகோட்டிற்கு கீழ் இடம்பெறக்கூடிய பயனாளிகளின் பட்டியல் எண் பதிவு செய்திட மத்திய அரசு பல்வேறு விதிகளை தெரிவித்துள்ளது. இதனை தமிழக அரசு தளர்த்திட மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டு வருகிறது. தமிழக அரசால் வழங்கப்படக்கூடிய நலத்திட்டத்தில் உண்மையான பயனாளிகள் பயன்பெறாமல் இருந்துவிட கூடாது” என்றார்.

முகாமில் தென்காசி தாசில்தார் பரமசிவன், சிவில் சப்ளை தாசில்தார் நல்லமைதீன், buy Amoxil online வருவாய் ஆய்வாளர் ஆதிநாராயணன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

Add Comment