மாநிலத்திலும் மாநகராட்சியிலும் ஒரே கட்சி ஆட்சி வேண்டும்

சென்னை : வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற மாநிலத் திலும், மாநகராட்சியிலும் ஒரே கட்சி ஆட்சி நடக்க வேண்டும் என்று அதிமுக மேயர் வேட்பாளர் சைதை துரைசாமி பிரசாரம் செய்தார். சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி, சைதாப்பேட்டை தொகுதியில் நேற்று வாக்கு சேகரித்தார்.  மாவட்ட செயலாளரும் அமைச்சருமான ஜி.செந்தமிழன் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். வழி நெடுக பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், பூக்களை தூவியும் வரவேற்றனர். கல்லுரி, மாணவ மாணவிகளும் வரவேற்பு அளித்தனர்.

பிரசாரத்தில், சைதை துரைசாமி பேசியதாவது: முதல்வர் ஜெயலலிதா, அனைத்து தரப்பு மக்களும் பயன்படும் வகையில் பணியாற்றி வருகிறார். தமிழக அரசின் செயல்பாடுகளை பார்த்து அமெரிக்காவின் வெளி உறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், நேரில் வந்து பாராட்டினார். இப்படிப்பட்ட முதல்வரின் ஆட்சியில் சென்னை மாநகராட்சி செயல்படும்போது அனைத்து வசதிகளையும் மேம்படுத்தி சென்னைக்கு பெருமை தேடி தருவார். ஆகவே, மக்கள் அனைவரும் மேயர் வேட்பாளராகிய எனக்கும், அதிமுக வார்டு உறுப்பினர்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

சென்னையில் பல அரசு குடியிருப்புகள், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் அடிப்படை வசதிகளை கூட செய்து தரப்படவில்லை. மக்கள் நலப்பணிகள் நடக்கவில்லை. இந்த நிலை மாற வேண்டும். மாநிலத்திலும் மாநகராட்சியிலும் ஒரே கட்சி அதிகாரத்தில் இருந்தால்தான் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற online pharmacy no prescription முடியும். என்னை மேயராக தேர்ந்தெடுத்தால் முதல்வரின் ஆலோசனைப்படி தூய்மையான, சுகாதாரமான, நேர்மையான மாநகராட்சியை உருவாக்குவேன். இவ்வாறு அவர் பேசினார்.

Add Comment