கடையநல்லூரில் நேற்று(08/10/11) மாலை போலீஸ் கொடி அணி வகுப்பு நடந்தது.

கடையநல்லூர்:உள்ளாட்சி தேர்தலையடுத்து கடையநல்லூரில் நேற்று மாலை போலீஸ் கொடி அணி வகுப்பு நடந்தது.உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு கடையநல்லூரில் போலீசார் நேற்று கொடி அணி வகுப்பினை கடையநல்லூரில் மேற்கொண்டனர். கடையநல்லூர் குமந்தாபுரத்திலிருந்து கிருஷ்ணாபுரம் தேசிய நெடுஞ்சாலை, மெயின்பஜார், மேலக்கடையநல்லூர் உள்ளிட்ட நகர முக்கிய பகுதிகள் வழியாக போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.டிஎஸ்பி பாண்டியராஜன் தலைமையில் நடத்தப்பட்ட அணிவகுப்பில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜெயராமன், புளியங்குடி ராதாகிருஷ்ணன், சிவகிரி பொம்மையாசாமி, வாசு., சண்முகவேல், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், முத்துலட்சுமி Buy Cialis உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.இந்த அணிவகுப்பின் போது வஜ்ரா உள்ளிட்ட போலீஸ் வாகனங்களும் இடம்பெற்றிருந்தன.

Add Comment