நம்மூர் கந்தூரி – அப்துல்லாஹ்

நம்மூர் கந்தூரி – அப்துல்லாஹ்

இப்போதெல்லாம்

மகன் தான் எல்லாம்

அவன் சொல்வதை

நான் கேட்கிறேன்….

அது ஒரு

கனவில் கூட மகிழ்ச்சி தரும்

கந்தூரிக்காலம் ….

அவன் சிறு பிள்ளையாய்

என் விரல் பிடித்து…

தர்காவின் திடல்

தகப்பனும் மகனுமாய்

கூட்டமென்றால் அவனுக்குபயம்

பையில் பத்து ரூபாயும்

கடனாகப் பெற்றது

சில்லரைகளும் அவனை மகிழ்விக்க

ராட்டினம் பாம்புப்பெண்

மரணக்கிணறு கலர்சர்பத்

அவனை தூக்கிக் கொண்டு

நெஞ்சோடு அழுத்தி……

ஒவ்வொரு நிகழ்வையும் கண்ணுறும்

அவனது பதட்டமும் பயத்தின் உந்துதலும்

என் தேவையை அவனிடம் கூட்டியது,,,

அவன் கன்னத்தை எனது முகத்துடன்

அழுந்திக் கொண்டு……

அவன் விரல் காட்டும் விருப்பங்கள்

அனைத்தும் அந்த வறிய நிலையிலும்

வளமாகக் கிட்டியது

அவனுக்கு…

அந்த தருணத்தைப் பிரியும் போது

அவன் கேட்பான்…

அடுத்த கந்தூரி எப்ப வரும்

இப்போதெல்லாம்

மகன் தான் எல்லாம்

அவன் சொல்வதை

நான் கேட்கிறேன்….

நாளை கந்தூரி நாள்

இன்று கொடிக் கட்டு

மேளம் முழங்க ஊரைச் சுற்றி

வரும் கொடிக்களையை

முதுகில் சுமந்த யானை…

மகன் சொல்லிவிட்டான்

இந்த வருடம் கந்தூரி

கொண்டாடக் கூடாது

மீறி புத்தாடையும்

பிரியாணியும் கொண்டாட்டமும்

அவன் அறிந்தால்

பணம் அனுப்ப மாட்டானாம்…

எதோ தவ்ஹிதாம்

நான் என்னத்த கண்டேன்

அவனுக்குத்தான் எல்லாம் தெரியும்

அவன் பணம் சம்பாதிக்கிறான்…

அவன Levitra online வுட்டா …

என்னை யாரு காப்பாத்துவா

அந்த அல்லாவா

இல்ல அவ்லியாவா

எம்மகன் தான்

இப்போதெல்லாம்

மகன் தான் எல்லாம்

அவன் சொல்வதை

நான் கேட்கிறேன்….

நான் அவனுக்கு இப்ப

ரொம்ப பயப்படுறேன்…

கந்தூரி கழியும் வரை

வீட்டை விட்டு இறங்கவே மாட்டேன்….

ஆழ்மனத்தின்…
ஆழ்கடலின்…

Add Comment