கடையநல்லூர் சமூக சேவை அறக்கட்டளையின் ஹாஜிகளுக்கான ஹஜ் விளக்கப் பயிலரங்கம்

கடையநல்லூர் சமூக சேவை அறக்கட்டளையின்
ஹாஜிகளுக்கான ஹஜ் விளக்கப் பயிலரங்கம்

கடந்த ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை பத்து மணி முதல் மதியம்ஒன்று முப்பது வரை
கடையநல்லூர் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இவ்வாண்டு ஹஜ்ஜுக்குச் செல்லும் ஹாஜிகளுக்கு ஒரு பயிலரங்கம் நடைபெற்றது. இப்ப்பயிலரங்கத்தில் கடையநல்லூர் வரலாற்றிலேயே முதன் முறையாக ப்ரொஜெக்டர் மூலம் படவிளக்கமும் சொற்பொழிவுகளும் நடத்தப்பட்டன.

சிலேடைக் கவிஞர் சிராஜ் அப்துல் ஹை சாஹிப் அவர்களின் நினைவரங்கில் ஜனாப் அல்ஹாஜ் எஸ். எம். ஹாஜா முயூநித்தீன் அஸ்லமி ஹழரத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மௌலவி அல்ஹாஜ் எம். சையது இபுராஹீம் அன்வாரி ஹழரத் அவர்களும் மௌலானா அல்ஹாஜ் பீர் முஹம்மத் ஆலிம் அவர்களும் ஹஜ் விளக்கவுரை ஆற்றினார்கள். தமிழ்நாடு ஹஜ் குழு உறுப்பினரும், தணிக்கைத் துறை உதவி இயக்குனருமான ஹாஜி ஏ. மீரா கனி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரிப் பேராசிரியர் ஹாஜி முனைவர் அஷ்ரப் அலி அவர்கள் ஹஜ் பட விளக்கவுரை ஆற்றினார்கள். சுமார் நூரி இருபத்தைந்து பேர்கள் கடைய நல்லூரின் பல பாகன்களிருந்தும் கலந்து கொண்டார்கள் . கடையநல்லூர் Buy Lasix சமூக சேவை அறக்கட்டளை சார்பில் ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக செய்யப் பட்டிருந்தன. டாக்டர் பீ. அ. முஹம்மது இக்பால் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கான பவர் பாயிண்ட் காட்சிகளை தமிழில் தயாரித்து வழங்கினார்கள் . வக்கீல் அப்துல் மஜீத் அவர்கள் ஹஜ் விளக்க வீடியோ குறுந்தகடைத் தமிழில் தந்து உதவினார்கள். சிராஜ் புக் ஸ்டோர் அதிபர் ஜனாப் அல்ஹாஜ் எஸ். எ. ஹபீபுர்ரஹ்மான் ஆலிம் அவர்கள் ‘ஹஜ்ஜில் ஓதக்கூடிய துஆக்கள் என்ற நூலை ஹாஜி களுக்கு இலவசமாக வழங்கினார்கள்.

இதுவரை இதுபோன்ற விளக்கமான பயிலரங்கம் கடையநல்லூரில் நடைபெற வில்லைஎன்ரும், இந்தப் பயிலரங்கம் தங்களுக்கு மிக பிரயோஜனமாக இருந்ததென்றும் கலந்துகொண்டவர்கள் பாராட்டினார்கள்.

ஜனாப் அல்ஹாஜ் எ .ஜி. செய்யத் முஹியித்தீன் (தாளாளர்,ஹிதாயதுல் இஸ்லாம் மேனிலைப் பள்ளி) அவர்கள் அரங்கம் தந்ததோடு மட்டுமல்லாமல் நிகழ்ச்சி மிகச் சிறப்பொடு நடைபெறுவதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் உதவிகளையும் செய்து தந்தார்கள்.

Add Comment