வாய்தா ராணி ஜெ.வுக்கு கே. என். நேரு பற்றி பேச அருகதையில்லை: மு.க. ஸ்டாலின்

 

Stalin
திருச்சி: சொத்து குவிப்பு வழக்கில் வாய்தா மேல் வாய்தா வாங்கும் ஜெயலலிதாவுக்கு கே. என். நேருவைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை என்று திமுக பொருளாளர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் கே. என். நேருவை ஆதரித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

திருச்சி இடைத்தேர்தலில் திமுகவை போட்டியிட விடக்கூடாது என்பதற்காகவே அதிமுக அரசு கே. என். நேரு மீது அடுத்தடுத்து பொய் வழக்குகளை அடுக்குகிறது. அவர்கள் எத்தனை வழக்கு தொடர்ந்தாலும் திமுகவை வீழ்த்திவிட முடியாது. நீதிமன்றத்திற்கு இவையெல்லாம் பொய் வழக்குகள் என்று தெரிவதால் தான் ஜாமீன் கேட்டால் உடனே ஜாமீன் கொடுக்கிறது.

நீதிமன்றத்தில் ஜாமீனை வாங்கிக் கொண்டு வெளியே வருவதற்குள் இன்னொரு வழக்கில் கைது செய்துவிடுகிறார்கள். எவ்வளவு பொய் வழக்கு போடுகிறீர்களோ, வாக்கு வித்தியாசம் அவ்வளவு அதிகமாகும்.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் வாய்தா மேல் வாய்தா வாங்கும் ஜெயலலிதாவுக்கு கே. என். நேருவை பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை. நேரு விடுதலையானதும் அவர் மீது அபாண்டமாக குற்றம் சுமத்திய ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்படும் என்றார்.

நாகையில் ஸ்டாலின் பிரச்சாரம்

வரும் உள்ளாட்சித் தேர்தலில் நாகை நகரசபை தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மு.க. ஸ்டாலின் நாகையில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது, 

தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாமல் எப்பொழுதுமே உங்களுடன் இருப்பவர்கள் என்ற உரிமையோடு உங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கிறோம். வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்து Buy Bactrim மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

கடந்த திமுக ஆட்சியில் உலகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. கருணாநிதி தன் ஆட்சிக் காலத்தில் சொன்னது போக சொல்லாததையெல்லாம் நிறைவேற்றினார். அயராது மக்கள் பணி செய்த அவருக்கு கொஞ்சம் ஓய்வு தேவை என்று நினைத்து ஓய்வு கொடுததிருக்கிறீர்கள். நீங்கள் ஓய்வு கொடுத்ததால் அவர் அரசியலை விட்டு ஒதுங்கிவிட்டாரா என்ன. இல்லையே.

அதிமுக அரசு நம்மை எப்படி, எப்படியெல்லாம் சோதிக்கிறது. திமுகவை ஒழிக்க, நம் வேட்பாளர்களை அச்சுறுத்த திட்டமிட்டே பொய் வழக்குகள் போடுகிறார்கள்.

திருச்சி மேற்கு தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடும் கே. என். நேரு கடந்த பொதுத் தேர்தலில் வேண்டுமானால் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கலாம். ஆனல் வரும் இடைத்தேர்தலில் 3,000 வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறப்போகிறார்.

மாற்றம் விரும்பிய மக்களுக்கு அதிமுக அரசு ஏமாற்றத்தைத் தான் தந்துள்ளது என்றார்.

Add Comment